ஓட்டு போடக்கூடாது என்பதற்காக கொல்லப்பட்ட இந்திய மக்களின் கதை தெரியுமா? | Unknown Facts About Nellie Massacre

0
0

#1

நெல்லி என்ற கிராமம் நாகோன் என்ற மாவட்டத்தில் இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் பெரிய நகரம் என்று அழைக்கப்படும் கவுஹாத்தி என்ற ஊருக்கு அருகில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இந்த நாகோன் ஊரும் இருக்கிறது

நாகோன் சுமார் பதினாறு கிராமங்களை ஒன்றிணைந்த ஓர் நகரமாகும். கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.

Image Courtesy

#2

#2

தங்கள் ஊருக்கு அகதிகளாக வந்திருக்கும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலம் முழுவது தீவிரமாக கிளர்ச்சி நடைப்பெற்ற காலம் அது. 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஊரில் அகதிகளாக வந்த மக்கள் தான் பெரும்பான்மை என்பதால் அந்த ஊர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிப்ரவரி 18 ஆம் தேதி காலையில் ஆரம்பித்த தாக்குதல் மாலை மூன்று மணி வரை தொடர்ந்தது. கிராமத்தை சுற்றி வளைத்து நாளாபுறத்திலிருந்து தாக்கினார்கள். அவ்வூர் மக்கள் தப்பிச் செல்ல ஒரே வழி கொப்பிலி என்ற ஆறு தான்.

நீச்சல் தெரிந்தவர்கள் ஆற்றில் குதித்து உயிர் பிழைத்தார்கள். ஏராளாமான மக்கள் அப்படி தப்பிச் செல்கிறார்கள் என்றதும் அங்கேயும் கொலைகாரார்கள் வந்து தப்பிக்க வரும் மக்களை அங்கேயே தண்ணீரில் மூழ்கடித்து கொன்றார்கள். தப்பிச் சென்றவர்களை எல்லாம் விரட்டிச் சென்று கொன்று குவித்தார்கள்.

Image Courtesy

#3

#3

இவ்வளவு பெரிய கொடூரம் நிகழ்ந்ததற்கு அடிப்படையாக சொல்லப்படுவது என்ன தெரியுமா? அஸ்ஸாம் மாநிலத்தின் மாணவர்கள் அமைப்பினர் தங்கள் நாட்டில் வரும் அகதிகளால் தங்களுக்கான உரிமை பறிக்கப்படுவதாக குரல் எழுப்பினார்கள்.

வேறு மாநிலங்களிலிருந்து வந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்த நபர்களுக்கு வாக்காளார் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அதனை திரும்ப பெற வேண்டும். அந்த மக்களை இந்த ஊரை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை துவக்கினார்கள். அப்போது நடைபெறவிருந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தார்கள் அஸ்ஸாமின் பூர்வகுடிகள்.

Image Courtesy

#4

#4

அஸ்ஸாமில் இருந்த பெங்காலி முஸ்லீம்களின் பலருக்கும் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்திருக்கவில்லை.

கிடைத்தவரைக்கும் நாம் அனைவரும் இந்த தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் அப்போது தான் அஸ்ஸாமில் எத்தனை பெங்காலி முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் இந்திய அரசாங்கத்திற்கு தெரிய வரும் என்று தீர்க்கமாக இருந்தார்கள்.அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பரவியிருந்த பெங்கால் முஸ்லீம்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை அதோடு பிப்ரவரி பதினான்காம் தேதி 1983 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான பெங்கால் முஸ்லீம்கள் வாக்களித்தனர்.

Image Courtesy

#5

#5

இந்த சம்பவம் தான் அந்த மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த முக்கிய காரணியாய் அமைந்து விட்டது. இந்த கோரம் நிகழ்ந்த பிறகு. குற்றியிரும் குலையுயுருமாய் காப்பாற்றப்பட்ட மக்களை நெல்லி என்ற ஊரின் கேம்ப் அமைத்து மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இறந்தவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு மூன்றாயிரம் ரூபாயும் சன்மானம் வழங்கப்பட்டது.

மாதக்கணக்கிலிருந்து ஒரு வருடம் வரை அந்த மக்கள் கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

Image Courtesy

#6

#6

இந்த கொடூரத்தில் தொடர்புடைய 688 பேரில் 299 பேரின் மீது எஃப் ஐ ஆர் பதியப்பட்டது. ஆனால் எந்த வழக்கும் தண்டிக்கப்படவில்லை. அஸ்ஸாம் மாநில முதல்வராக ஏஜிபி கட்சியை சேர்ந்த ப்ரஃபுல்லா குமார் மஹந்தா என்பவர் பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்புக்கு வந்ததும் நெல்லி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பொதுமன்னிப்பில் விடுவிப்பதாகவும் அவர்களின் மேல் இருந்த வழக்குகள் அத்தனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

Image Courtesy

#7

#7

மக்களின் வாயை அடைப்பதற்காக இந்த படுகொலை சம்பவத்தை பற்றி விசாரிக்க ஓர் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டது. திவாரி கமிஷன் என்று அழைக்கப்பட்ட இந்த கமிஷன் அடுத்த ஆண்டு அதாவது 1984 ஆம் ஆண்டு தங்களுடைய ஆய்வு முடிந்தவிட்டதாக தெரிவித்தார்கள். ஆனால் அவை சமர்ப்பிக்கவில்லை.

சிலர் தகவலரியும் உரிமைச் சட்டத்தின் படியும் அந்த விசாரணைக்கமிஷனின் அறிக்கையை கேட்டார்கள் அவர்களுக்கும் வழங்காமல் இழுத்தடித்தார்கள். அந்த தாக்குதலிலிருந்து தப்பித்தவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் எப்படியாவது தண்டனை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று போராடினார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை.

Image Courtesy

#8

#8

ஒரு கொடூர கொலையை எல்லாருமாக சேர்ந்து திட்டமிட்டு மறைத்திருக்கிறார்கள். ஓட்டுப் போடக்கூடாது என்றது ஒரு தரப்பு இல்லை ஓட்டு போடுவது எங்களின் உரிமை ஓட்டுப் போடுவதன் மூலமாகத் தான் எங்களுக்கான அங்கிகாரத்தை பெற முடியும். இவ்வளவு மக்கள் இங்கே இருக்கிறார்கள் என்று அரசுக்கு தெரியபடுத்த முடியும் என்றார்கள்.

ஊரை விட்டு வந்தேறிகளாக இங்கே வந்து எங்களுடைய உரிமையில் பங்கு கேட்பதா என்று ஆத்திரமுற்று படுகொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் அதிகமாக நெல் விளையும். அந்த நெல் விளையும் வயல்வெளிகளில் எல்லாம் பிணங்கள் தான். அந்த ஊரைக் கடந்து செல்லும் கொப்பில் ஆறு ரத்த நிறமாகவும் பிணங்கள் நிறைந்ததாகவும் மாறியிருந்தது.

Image Courtesy

#9

#9

அந்த நிகழ்வின் போது உயிர் பிழைத்தவர்கள் கூறும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் பதறவைக்கக்கூடியதாக இருக்கிறது. நூருல் என்பவர் கூறுகையில் அப்போது எனக்கு ஏழுவயதிருக்கும் திடீரென்று மக்கள் கூட்டமாக ஓடினார்கள் அப்பா என்னையும் அம்மா மற்ற சகோதரர்களை இழுத்துக் கொண்டு ஓடினார். நானும் ஒரு தம்பியும் அப்பாவின் கையில் இருந்தும் கடைசி தம்பியை அம்மா தூக்கிக் கொண்டு எங்கள் பின்னால் ஓடி வந்தார்.

நெருக்கமாக ஆட்கள் ஓடி வந்து கொண்டிருந்ததால் அம்மாவை கவனிக்கவில்லை. ஆத்துப் பக்கம் போய்ட்டா தப்பிச்சிடலாம் என்பது தான் அப்போதைய எங்களின் ஒரே எண்ணமாக இருந்தது. அடித்துப் பிடித்து ஆற்றை நெருங்கும் போது தான் அப்பா கையிலிருந்து ஒரு தம்பி குண்டடிப்பட்டு இறந்திருப்பது எங்களுக்கு தெரிந்தது. பின்னால் அம்மா வரவில்லை. இறந்த தம்பியை வைத்துக் கொண்டு என்னை சற்று மறைவாக இருக்கச் சொல்லிவிட்டு அப்பா அம்மவைத் தேடிப் போனார்.அன்று மாலை அம்மாவின் பிணத்துடன் தான் அப்பா திரும்பினார்.

எனக்கும் கடுமையான காயங்கள் இருந்தது. சுமார் 22 நாட்கள் கவ்ஹாத்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர் கேம்ப்க்கு திரும்பினேன்.

Image Courtesy

#10

#10

அலிக்ஜான் பீவி என்ற பெண்மணி கூறுகையில். கண்மூடித்தனமாக சுட்டுக் கொண்டேயிருந்தார்கள். அவர்கள் மிகவும் ஆக்ரோசமாக இருந்தார்கள்.

கொல், அவர்களை விடாதே கொல் என்ற வார்த்தை தான் அவர்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. எங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தை எங்களது உடைமைகளை நாங்கள் இழந்திருந்தோம். உயிர் பிழைக்க தப்பியோட ஆற்றுப்பக்கம் வந்தவர்களை அவர்கள் விட வில்லை.

Image Courtesy

#11

#11

மொனாருதீன் என்பவர் கூறுகையில், என்னுடன் பிறந்தவர்களின் அங்கமெல்லாம் சிதறிக் கிடக்க இறந்து கிடந்தார்கள். என் கண் முன்னே என் பெற்றோரையும் கொன்றார்கள். ஊரில் இருந்த ஒரு பெரியவர் என் சட்டையை பிடித்துக் கொண்டு என்னை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். அப்போது எனக்கு தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட தம்பி தங்கைகளை எழுப்ப வேண்டும். அம்மாவையும் கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்று தான் தோன்றியது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது அப்போது உறைக்கவில்லை.

அப்படி தப்பித்து வருகையில் நான் கண்ட ஒரு காட்சி என்னை ஆயுளுக்கும் வலிக்கச் செய்யும்.

Image Courtesy

#12

#12

எங்களின் குடிசைகளை தரைமட்டமாக்கி தீயிட்டு கொழுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே தீ கொழுந்து விட்டு எரிந்தது. எங்களுக்கு முன்னே ஒரு பெண் தன் குழந்தையை அனைத்தபடி ஓடிக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து அந்த குழந்தையை பிடுங்கினார்கள் அவர் விடாது இறுக்கமாக பிடித்துக் கொள்ளவே அந்தப் பெண்ணை கொன்று குழந்தையை பிடுங்கினார்கள்.

அங்கே இருந்த யாருக்கும் குழந்தையை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கவலையில்லை. எப்படியாவது உயிர் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது அடுத்தவன் காப்பாற்றப்பட்டானா என்று பார்ப்பது எல்லாம் சாத்தியமா? என்னை யாரோ ஒரு புண்ணியவன் இழுத்துக் கொண்டு ஓடுவதால் என்னால் அந்த காட்சியை பார்க்க முடிந்தது.

அவ்வளவு கொடூரமான மனிதர்களும் இங்கே இருக்கிறார்களா என்று யோசிக்க வைத்தது அந்த காட்சி.

Image Courtesy

#13

#13

அழுது அலறிக் கொண்டிருந்த அந்த குழந்தையை அப்படியே நெருப்பில் வீசினார்கள். ஒரு கணம் என் உயிரே நின்று போய் திரும்பியது. அன்றைய தினம் முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். இரவு உடலெங்கும் ரத்தக்காயங்களும் அப்பாவை பார்த்தேன்.

அரசாங்கம் எங்களுக்கு உதவித்தொகை அளிப்பதாக சொன்னார்கள். மேற்கொண்டு எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் வீட்டினை சென்று பார்த்தோம். முழுவதும் தரைமட்டமாக்கியிருந்தார்கள். ஒரு பொருளும் மிஞ்சவில்லை. உணவுப் பொருட்களை எல்லாம் தீயிட்டு கொழுத்தியிருந்தார்கள். குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்.

Image Courtesy

#14

#14

காலை ஏழு மணிக்கு வழக்கம் போலத்தான் விடிந்தது. நாங்கள் எல்லாம் வரிசையாக படுத்திருந்தோம். அம்மா அடுப்பினை எரித்து எதோ செய்து கொண்டிருந்தார். அப்போது வாசலில் படுத்திருந்த அப்பா திடிரென்று உள்ளே புகுந்து எங்கள் நால்வரையும் எழுப்பி ஓடு ஓடு வெளிய ஓடு என்று துறத்தினார். கடைசியாக அம்மாவையும் இழுத்துக் கொண்டு அப்பா வெளியே வருவதற்கும் அவர்கள் எங்கள் வீட்டை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

வீட்டு வாசலிலேயே அம்மாவை வெட்டி வீழ்த்தினார்கள். அப்பா எங்கோ இரு திசையில் தெறித்து ஓடினார். மக்கள் கூட்டமாக காய்கறி அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தார்ப்பாயின் கீழ் பதுங்கினார்கள். அங்கே ஏற்கனவே மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்து பலரும் இறந்தார்கள்.

Image Courtesy