ஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..! | Ola starts making money on each ride, inches closer to profitability

0
0

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஒலா, அமெரிக்கா உபர் உடன் போட்டி போட்டு வந்தாலும், தொடர்ந்து இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து தள்ளுபடி, சலுகை எனத் தொடர்ந்து அறிவித்த காரணத்தால் நஷ்டத்தை மட்டுமே பெற்ற ஓலா தற்போது லாபத்தைப் பெற துவங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஓலா நிறுவனத்தின் ஒவ்வொரு பயணத்திலும் லாபத்தைப் பெற துவங்கியுள்ளது. இது ஆன்லைன் டாக்ஸி சேவையில் ஒரு மையில்கல் என ஒலா தெரிவித்துள்ளது.

ஆனால் இது போதாது, ஒலா நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பளம் மற்றும் தொழில்நுட்பத்திற்குச் செய்யும் செலவை திருப்பி எடுக்கும் அளவிற்கு லாபத்தை அடையும் போதுதான் நிறுவனம் முழுமையான லாபத்தை அடையும் நிறுவனமாக மாறும்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் ஒலா முழுமையான லாபத்தை அடையும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ENTR – effective net take rate அளவீடு லாபகரமாக மாறியுள்ளது. இதனை அடிப்படையிலேயே ஒலா லாபகரமாக மாறியுள்ளது என ஓலா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் பிவிஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க