ஒழுக்கமாக இருக்கச் சொன்னதற்காக பொன்னம்பலத்திற்கு சிறையா? | It is not fair to keep Ponnambalam behind bars

0
0

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளச் சொன்னதற்காக பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனையா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கி 3 வாரங்கள் ஆகியும் சிறையை பயன்படுத்தாமல் இருந்தார்கள். அந்த சிறை என்ன தூங்கிக் கொண்டிருக்கிறதா என்று விமர்சனம் எழுந்த பிறகே நேற்று பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு சிறையை பயன்படுத்தாமலேயே இருந்திருக்கலாம்.

பொன்னம்பலம்

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள பெண்களில் சிலர் அணியும் உடைகள் அரைகுறையாக உள்ளது. அதை கூட அவர்கள் விருப்பம் என்றாலும் அவர்கள் ஆண் போட்டியாளர்கள் சிலருடன் சேர்ந்து நடந்து கொள்ளும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது.

ஷாரிக்

ஷாரிக்

இரவு நேரத்தில் ஷாரிக் ஐஸ்வர்யாவின் படுக்கையில் படுத்தது தவறு தான். இதை தவறு என்று கூறி புத்திமதி சொன்ன பொன்னம்பலம் ரொம்ப கெட்டவர் ஆகிவிட்டார்.

அனந்த்

அனந்த்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறிய பொன்னம்பலம் அனந்துக்கு கெட்டவராக தெரிந்து அவரை சிறையில் தள்ளிவிட்டார்.

உண்மை

உண்மை

பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று கூறி பொன்னம்பலம் புத்திமதி கூறியதை கமல் ஹாஸனே ஆமோதித்தாரே. நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால் நிகழ்ச்சியின் முடிவில் நானே சொல்லியிருப்பேன் என்றாரே. அப்படி பார்த்தால் அனந்த் வைத்தியநாதன் கமலையும் சேர்த்து சிறையில் தள்ளியிருக்கணுமே. பொன்னம்பலம் கெட்டவர் என்றால் அவரின் கருத்தை ஆமோதித்த கமல் ஹாஸனும் கெட்டவர் தானே?

மதிப்பு

மதிப்பு

பொன்னம்பலம் பேசியது தவறாக இருந்திருந்தால் பார்வையாளர்கள் கை தட்டி அவரை பாராட்டியிருக்க மாட்டார்களே. அப்படி என்றால் பார்வையாளர்களுக்கும் மதிப்பே இல்லையா? பார்வையாளர்கள் தான் முக்கியம் என்று கூறுவது பொய்யா?