ஒரு மணி நேரம் தாங்க.. ஒரு வருஷ வித்தையும் மொத்தமாக இறங்கிருச்சு.. புளகாங்கிதப்படும் ராணா! | Rana takes selfie with Kamal

0
0

ஹைதராபாத்: கமல் ஹாசனை சந்தித்தது குறித்து நடிகர் ராணா டகுபதி பெருமிதத்துடன் ஒரு டிவீட் போட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கிலும் ஓடுகிறது. அங்கு நான் ஈ பட புகழ் நாணி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது விஸ்வரூபம் 2 படத்துக்கான புரமோஷனை கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்கு அவர் போயுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

இதற்காக ஹைதராபாத் வந்தபோது விமானத்தில் வைத்து கமல்ஹாசனை ராணா பார்த்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். கடவுளின் பக்தர் போல கமல்ஹாசனுக்கு அருகே பவ்யமாய் உட்கார்ந்தபடி எடுத்துக் கொண்ட செல்பியை போட்டுள்ளார் ராணா. ராணாவின் புகைப்படத்தில் மட்டுமல்ல அவரது வார்த்தைகளிலும் அப்படி ஒரு பவ்யம் வளைந்தாடி விளையாடுகிறது.

ராணா போட்டுள்ள டிவீட்டில், ஒரு வருடத்தில் கற்றுக் கொண்டதை ஒரே மணி நேரத்தில் உங்களால் அறிந்து கொள்ள முடியுமா.. முடியும் என்றால் நீங்கள் மாபெரும் மேதை கமல்ஹாசனை சந்தித்து விட்டீர்கள் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார் ராணா.

ரொம்ப மடங்குறீங்களே ராணாஜி.. !