ஐஸ்வர்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டது ஆனால் காதல்…: பிளேட்டை மாத்திப் போட்ட ஷாரிக் | I was attracted to Aishwarya but…: Shariq

0
0

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஐஸ்வர்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும், அவரை காதலிக்கவில்லை என்று ஷாரிக் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டவர் ஷாரிக் தான். ஷாரிக் வெளியேறிய அன்று ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி, மும்தாஜ் ஆகியோர் பயங்கரமாக அழுதனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஷாரிக் கூறியதாவது,

பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என் பெயர் பலருக்கும் தெரிந்துள்ளது. சிலர் என்னை ஷாரிக் சார் என்று அழைக்கிறார்கள். என்னை எதற்காக வெளியே அனுப்பினார்கள் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. மக்கள் என்னிடம் என்ன எதிர்பார்த்தார்கள் என தெரியவில்லை. முதல் முறை நாமினேட் செய்தபோதே என்னை வெளியேற்றியதால் வருத்தமாக இருந்தது. நான் வெளியே வந்ததும் மக்கள் என் மீது அதீத அன்பு காட்டுகிறார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை.

பேச்சு

பேச்சு

நான் யாருடனும் பழகாமல் உள்ளேன் என்று மக்கள் நினைத்துள்ளனர். நான் சக போட்டியாளர்களுடன் சேராமல் இருந்ததை மக்கள் சுட்டிக்காட்டினார்கள். நான் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று போட்டியாளர்கள் கூட தெரிவித்தார்கள். ஆனால் தேவையில்லாமல் சும்மா பேச வேண்டுமே என்பதற்காக ஏன் பேசணும் என்பது எனக்கு புரியவில்லை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புகிறேன். பாலாஜி மீது குப்பை கொட்டி ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக தான் நடந்து கொண்டார். பிக் பாஸ் அவரை அழைத்து ஏதோ வீடியோ போட்டுக் காட்ட அவர் பழிவாங்கும் வெறியில் வந்ததை நாங்கள் பார்த்தோம். ஐஸ்வர்யா அப்படி நடந்திருக்கக் கூடாது. ஐஸ்வர்யா என்னை சிலைக்கு அருகில் நிற்க வைத்தார். அந்த டாஸ்கை நான் செய்தபோதும் எனக்கு பிடிக்கவில்லை.

யாஷிகா

யாஷிகா

நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற உடனேயே மகத், யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியுடன் நெருக்கமாகிவிட்டேன். நாங்கள் பேசத் துவங்கியபோது ஐஸ்வர்யாவுக்கு என்னை பிடிக்கத் துவங்கியது. எனக்கும் அவரை பிடித்தது. ஆனால் தோழியாக மட்டுமே. நான் அனைவர் மீதும் ஒரே மாதிரியாகத் தான் அன்பு வைத்தேன். மகத்தும், நானும் சகோதரர்கள். அதே அன்பும், மரியாதையும் யாஷிகா மீதும் உண்டு.

காதல்

காதல்

எனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் நான் அவரை காதலிக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஐஸ்வர்யா உள்பட அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்பில் இருப்பேன். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி ஏன் சண்டை போட்டார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நான் அமைதியாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். சின்னப்புள்ளத்தனமாக சண்டை போடாதீர்கள் என்று சிலருக்கு நான் அறிவுரை வழங்கியுள்ளேன் என்றார் ஷாரிக்.