ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் 20 இந்திய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு

0
0

ஐக்கிய அரபு அமீரக லாட்டரி குலுக்கலில் 20 இந்தியர்கள் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரளாவின் ஆழப்புழா பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் டோஜோ மேத்யூ, டிட்டோ மேத்யூ. இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். டோஜோ, டிட்டோ மற்றும் நண்பர்கள் என 20 பேர் மாதந்தோறும் ஐக்கிய அரபு அமீரகத் தின் லாட்டரி சீட்டுகளை வாங்கு வது வழக்கம். இந்த லாட்டரி சீட்டு ஒன்றின் விலை ரூ.9,400. 2 லாட்டரி சீட்டு வாங்கினால் ஒன்று இலவசம். 20 நண்பர்களும் கடந்த 7 மாதங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தனர்.

டோஜா மேத்யூவின் மனைவி மினு டெல்லியில் செவிலியராக பணியாற்றுகிறார். அவருக்காக வேலையை ராஜினாமா செய்த டோஜோ, கடந்த 24-ம் தேதி அபுதாபியில் இருந்து புறப்பட்டார். விமானத்தில் ஏறும் முன்பு நண்பர்களுடன் இணைந்து அபுதாபி விமான நிலையத்தில் 3 லாட்டரி சீட்டுகளை டோஜா வாங்கினார். இதற்காக ஒவ்வொருவரும் ரூ.500 முதல் ரூ.2,000 வரை தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

கடந்த 3-ம் தேதி நடந்த லாட்டரி குலுக்கலில் நண்பர்கள் குழு வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது. இதன் பரிசுத் தொகை ரூ.13 கோடி. இதுகுறித்து டோஜோ கூறியபோது, “கேரளாவில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எனது கனவு. லாட்டரி பரிசுத் தொகை மூலம் எனது கனவை நிறைவேற்றுவேன்” என்றார். டிட்டோ மேத்யூ கூறியபோது, “நண்பர்கள் அனைவரும் பணம் பிரித்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளோம். அவரவர் அளித்த பணத்துக்கு ஏற்ப பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள் வோம்” என்றார்.