ஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது?: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள் | Nayanthara fans make fun of Vignesh Shivan

0
0

சென்னை: நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கிறார்கள் ரசிகர்கள்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள கோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காதலியின் நடிப்பை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவனால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் நயன்தாராவை நேரிலேயே பாராட்டியிருக்கலாம். ஆனால் அவர் கோலமாவு கோகிலா ஸ்டில்லை ட்விட்டரில் வெளியிட்டு தனது காதலியை மனதார பாராட்டினார்.

அழுகை

நயன்தாரா அழுவது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தலைவி ஏன்டா அழுகுது என்று கேட்கிறார்கள்.

என்னது இது?

பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொன்னால் என்ன செய்தீர்கள் என்று விக்கியை கேட்கிறார்கள் ரசிகர்கள்.

ஐஸ்

காதலிக்கே ஐஸா விக்னேஷ் சிவன்?