எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி புழல் சிறையில் 14 கைதிகள் விடுதலை

0
0

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப் படுவார்கள் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் விதிகளின்படி விடுதலை செய்ய தகுதியான நபர்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர். இதில், புழல் சிறையில் இருந்து இதுவரை 4 கட்டமாக 177 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

5-ம் கட்டமாக நேற்று 14 கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவர் களுக்கு வெளியே சென்று தொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளைச் சிறை அதிகாரிகள் செய்து இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களை அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி யோடு வரவேற்றனர்.