எப்படி இருக்கிறது கருணாநிதி உடல்நிலை? – இந்து தமிழ் திசை

0
0

கருணாநிதியின் சுவாசத்தை சீராக்க அவரது கழுத்துப் பகுதியில் சிறிய துளையிட்டு டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், தேவைப்படும்போது மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் தானாகவே சுவாசித்து வருகிறார். அவருக்கு வயோதிகத்தால் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கல்லீரல் பிரச்சினைக்கு டாக்டர் முகமது ரேலா ஆலோசனையின்படி டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கல்லீரல் பிரச்சினையால் ஆரம்பக்கட்ட மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்துள்ளன. அவர் தன்னை சுற்றி நடப்பதை தெரிந்துக் கொள்ளும் நிலையில் இருப்பதை நவீன மருத்துவக் கருவிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவரால் உணர்வுகளை வெளிக்காட்ட முடியவில்லை. அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.