என் நண்பனின் 26 வருடங்கள்…! தல அஜித்துக்கு விஸ்வாசம் காட்டும் பாலிவுட் நடிகர்! | Vivek Oberoi shows his Viswasam for Thala!

0
0

மும்பை: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிகர் அஜித்தின் 26 வருட திரைவாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகிறது. அதைக் கொண்டாடும் வகையில் 26வருட அஜித்திஸம் என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நடிகர் அஜித் தன்னுடைய முதல்படமான அமராவதி திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நாளை தல அஜித்தின் 26வருட கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைத்துறை பிரபலங்களும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தன்னுடைய அன்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அஜித்துடன் விவேக் ஓபராய் நடித்த விவேகம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. விவேகம் திரைப்படத்தில் அவர் அதிகமாக பயன்படுத்திய நண்பா என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு விவேகம் திரைப்பட போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

என் நண்பனின் 26 வருடங்கள்… இன்னும் பல மறக்கமுடியாத நடிப்பின்மூலம் நீ எங்களை மகிழ்விப்பாய் என நம்புகிறேன்… “எனக்கு விஸ்வாசம் இருக்கு” என ட்வீட் செய்துள்ளார்.