என்ன அழகு…! கீபோர்டு வாசிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஜூனியர்…! | Yuvan Shankar Raja daughter video!

0
0

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் கீபோர்டு வாசிக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

மிகப்பெரிய லெஜண்ட் இசையமைப்பாளருக்கு மகனாகப் பிறந்த யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய 16வது வயதில் திரைத்துறைக்கு வந்துவிட்டார்.

சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானானாலும், பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்திற்குப் பிறகுதான் முழுமையான இசைமைப்பாளர் என்ற பெயர் கிடைத்தது.

அதன்பிறகு எத்தனையோ வெற்றிப்படங்களைக் கொடுத்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். இசையமைப்பாளர், பாடகர் என்று தொடங்கி இன்று பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.

ஆனால் யுவனின் மகளோ யுவனை பின்னுக்குத் தள்ளி இசைத்துறையில் கால்பதித்துவிடுவார் எனத் தோன்றுகிறது. யுவனின் மகள் ஸியா கீபோர்ட் வாசிக்கும் அழகான வீடியோவை யுவன் பகிர்ந்துள்ளார்.

தாத்தா, அப்பா, பெரியப்பா என குடும்பமே இசைக்குடும்பமாக இருக்கும்போது இந்த குட்டிக்குழந்தை கீபோர்டில் ஆர்வமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.