“என்னை எவ்ளோ பேர் ஏச்சிருக்காங்க தெரியுமா”.. கஸ்தூரியின் அதிர வைக்கும் டிவிட்! | Many people cheated me in money matter:Kasthuri

0
0

சென்னை: தான் வரி ஏய்ப்பு செய்ததில்லை என்றும், ஆனால் பலர் தன்னை பண விசயத்தில் ஏமாற்றியிருப்பதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

1990-களில் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, சின்னவர், புதிய முகம், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி இருந்த அவர், சமீபத்தில் சிவாவின் தமிழ்ப்படம் 2வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

டிவிட்டர்:

எப்போதும் சமூகவலைதளத்தில் பரபரப்பாக இயங்கி வரும் திரைப் பிரபலங்களில் கஸ்தூரியும் ஒருவர். சமூக, அரசியல் விவகாரங்கள் குறித்து அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார்.

மோசடி வாடிக்கை:

அந்தவகையில், காஞ்சீபுரம் கோவில் சிலை மோசடி விவகாரம் பற்றி சமீபத்தில் கஸ்தூரி டிவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் அவர், “அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி, திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மீ பாவம்:

மீ பாவம்:

கஸ்தூரியின் இந்தப் பதிவிற்கு கமெண்ட் போட்டுள்ள ரசிகர் ஒருவர், ‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?” என அதில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க.

ஏமாற்றுப் பேர்வழிகள்:

ஏமாற்றுப் பேர்வழிகள்:

பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்-2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்” எனப் பதில் அளித்துள்ளார்.