என்னா ஆட்டம்.. எல்லாம் முடிஞ்சுதா?.. ஐஸ்வர்யாவை அடக்கி முடக்கிய பிக் பாஸ் | Aiswarya revenge come to end in Biggboss!

0
0

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது இன்றைய புரோமோ மூலம் தெரிகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கியது.

வீட்டிற்கு வந்த 16 போட்டியாளர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டு இப்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பாத்ரூமை பயன்படுத்துவதற்கும், டீ குடிப்பதற்குமா டாஸ்க் வைப்பீர்கள் என்று ஒருபக்கம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சர்வாதிகார ஆட்சி என்ற லக்சூரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மற்றும் தற்போது ரிலீஸாக உள்ள மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டின் ராணியாக நியமிக்கப்பட்டார்.

ராணி என்றதுமே அவரின் ஆட்டம் ஆரம்பமானது, பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடிக்காதவர்களை கடுமையாக கொடுமைப்படுத்தினார். ரித்விகாவை சீண்டியது, பாலாஜி மீது குப்பை கொட்டியது என ஐஸ்வர்யாவின் ஆட்டம் எல்லை மீறியது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவில், ஐஸ்வர்யாவின் அராஜகங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. வைஷ்ணவி சீக்ரட் ரூமிற்குள் இருந்து வெளியே வருகிறார். எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் யார் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை வரிசைப்படுத்தி நிற்க வைக்க வேண்டும் என படித்துவிட்டு டேனியை தனியே நிற்கச் சொல்கிறார்.

டேனி நேர்மையானவர்கள் வரிசையில் முதலில் உள்ளாரா அல்லது கடைசியில் உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.