என்னாது, மறுபடியும் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியா? | Gayathri Raghuram to go to Bigg Boss house again?

0
0

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு காயத்ரி ரகுராம் வரப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

பிக் பாஸ் முதல் சீசன் அளவுக்கு 2வது சீசனில் சுவாரஸ்யம் இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஒரு காயத்ரி இல்லை, ஜூலி இல்லை, ட்ரிக்கர் இல்லை என்ன பிக் பாஸ் இது என்று பார்வையாளர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் தான் காயத்ரி ரகுராம் பற்றி ஒரு பேச்சு கிளம்பி தீயாக பரவியுள்ளது.

காயத்ரி ரகுராம்

அழைத்தாலும் கூட மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன் என்று கூறிய காயத்ரி ரகுராம் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு எந்த நிகழ்ச்சி என்று கண்டுபிடிங்க பார்ப்போம் என்று நெட்டிசன்களிடம் கேட்டார்.

பிக் பாஸ்

காயத்ரியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ அவர் பிக் பாஸ் 2 வீட்டிற்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக போகிறார். அதனால் தான் இப்படி சூசகமாக ட்வீட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

தைரியம்

காயத்ரி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டிஆர்பி தாறுமாறு தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

விருப்பம்

பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறீர்களா? அங்குள்ள போட்டியாளர்களை அடக்கி வையுங்க என்றும் காயத்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யூகம்

நெட்டிசன்கள் எந்த நிகழ்ச்சி என்று யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காயத்ரியோ எந்த நிகழ்ச்சி என்பதை கூறாமல் அமைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.