என்னது…!! இந்த வீட்டு வைத்தியம் வெள்ளை முடிகளை கலரிங் செய்து மாற்றுகிறதா….!! | homemade coloring tips for grey hair

0
0

#1: ஹோம்மேட் ஆயில்

தேவையானவை :-

– தேங்காய் எண்ணெய்

– நல்லெண்ணெய்

– ஆலிவ் எண்ணெய்

– கடுகு

– கருவேப்பில்லை

– நெல்லிக்காய்

– மருதாணி இலைகள்

செய்முறை :-

ஒரு பாத்திரத்தில் 50 ml தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் காய்ச்சவும். பின்பு இன்னொரு கடாயில் 10 gm கடுகு, 20 gm கருவேப்பில்லை,20 gm நெல்லிக்காய்,20 மருதாணி இலைகள் அகியவற்றை எடுத்து கொண்டு அதனை வறண்டு போகும் வரை வதக்கவும்.பிறகு அந்த எண்ணெய் கலவையை இதில் ஊற்றி 10 நிமிடம் சூடு செய்யவும். அதன் பிறகு இதனை காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து,சூரிய ஒளி படும் இடத்தில் 4 நாட்களுக்கு வைத்து விடவும். இறுதியாக இந்த டப்பாவில் அடியில் எண்ணெய் தேங்கி இருக்கும்.அதனை எடுத்து முடியின் வேர் முதல் அடி வரை தினமும் நன்கு தேய்த்து வர உங்கள் வெள்ளை முடிகள் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

#2: மருதாணி பேஸ்ட் :-

#2: மருதாணி பேஸ்ட் :-

தேவையானவை :-

– மருதாணி இலைகள்

– இண்டிகோ(அவுரி ) பவுடர்

செய்முறை :-

மருதாணியை முதலில் நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும் .அதனை தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து கழுவி விடவும். சிறிது நேரம் கழித்து 100g இண்டிகோ(அவுரி ) பவுடரை மிதமான சூடு தண்ணீரில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து இந்த பேஸ்டை 45 நிமிடம் வரை தலையில் தேய்த்து ஊற வைத்து கழுவி விடவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை தடவி வரவும். இவ்வாறு செய்தால் உங்கள் முடி நிச்சயம் கரு கருவென்று மாறிவிடும்.

#3: ஹேர் பேக் :-

#3: ஹேர் பேக் :-

தேவையானவை :-

– ஆலிவ் எண்ணெய்

– மருதாணி இலைகள்

– கற்றாழை

– கடுக்காய்

– நெல்லிக்காய்

– எலுமிச்சை சாறு

செய்முறை :-

இந்த ஹேர் பேக் தயார் செய்ய முதலில் 50g மருதாணி இலைகள்,20 ml கற்றாழை, 5g கடுக்காய் தோல்,20g நெல்லிக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முடியில் தடவவும்.

இதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய்யை தலையில் தடவி 20 நிமிடத்திற்கு பின்பு அதனை கழுவி விட்டு இந்த பேக்கை அப்ளை செய்தால் அழகான பிரவுன் கலர் முடி உங்களுக்கு கிடைக்கும்.

#4: ஆலிவ் எண்ணெய் மசாஜ் :-

#4: ஆலிவ் எண்ணெய் மசாஜ் :-

தேவையானவை :-

– ஆலிவ் எண்ணெய்

– சிகைக்காய்

செய்முறை :-

முதலில் 20 ml ஆலிவ் எண்ணெய் எடுத்து கொண்டு அதனை முடியின் அடிவேர் வரை 1 மணி நேரம் நன்கு தடவி மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெய்க்கு முடியை கரு கருவென மாற்றும் தன்மை இயற்கையாகவே இருக்கிறது. அடுத்து முடியை சிகைகாய் தேய்த்து வாரத்திற்கு 2 முறை குளித்து வந்தால் அட்டகாசமான கருமையான முடியை பெறலாம்.

#5: கலவை பேஸ்ட் :-

#5: கலவை பேஸ்ட் :-

தேவையானவை :-

– கடுக்காய்

– நெல்லிக்காய்

– மருதாணி இலைகள்

– துளசி

– தயிர்

– டீ டிகாஷன்

– யூக்கலிப்டஸ் எண்ணெய்

– எலுமிச்சை சாறு

– ஆலிவ் எண்ணெய்

செய்முறை :-

இந்த கலவை பேஸ்ட் தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கு 10g கடுக்காய், 25g நெல்லிக்காய், 200g மருதாணி இலை பவுடர் , 10g துளசி, 100ml தயிர்,100ml டீ டிகாஷன், 2ml யூக்கலிப்டஸ் எண்ணெய், 10சொட்டு எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை இரும்பு பாத்திரத்தில் நன்கு கலக்கி ஒரு இரவு முழுவதும் வைத்து விடவும். அடுத்த நாள் காலையில் அந்த கலவையை எடுத்து தலை முழுவதும் தடவி மசாஜ் செய்து 2 மணி நேரம் கழித்து மிதமான நீரில் கழுவினால் பொலிவான கருப்பு முடியாக வெள்ளை முடிகள் அனைத்தும் மாறும். இந்த கலவை மேலும் முடி வெள்ளையாக மாறுவதை தடுக்கவும் செய்யும்.

#6: இளநரை தடுத்தல்:-

#6: இளநரை தடுத்தல்:-

தேவையானவை :-

– கருவேப்பில்லை

– செம்பருத்தி இலைகள்

– கரிசாலை இலைகள்

– கொத்தமல்லி இலைகள்

– எலுமிச்சை சாறு

செய்முறை :-

இந்த செய்முறை உங்கள் முடியை இலை இளநரையில் இருந்து காப்பாற்றும்.அதற்கு கைநிறைய கருவேப்பில்லை, செம்பருத்தி இலைகள்,கரிசாலை இலைகள், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை எடுத்து கொண்டு, பேஸ்ட் போல அரைத்து கொள்ளவேண்டும்.பின்பு அதனுடன் 5 சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து முடிகளில் அப்ளை பண்ணவும்.பிறகு 1 மணி நேரம் கழித்து இதனை கழுவி விடவும்.இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இளநரைகள் காணாமல் போய்விடும்.