என்சாய்: விஷாலை வாழ்த்திய வரலட்சுமி | Varalakshmi about Sandakozhi2

0
0

சென்னை: நடிகை வரலட்சுமி சண்டக்கோழி 2 பட ஷூட்டிங் பற்றி ட்வீட்டியுள்ளார்.

நடிச்சா ஹீரோயின் சார் என்று அடம்பிடிக்காமல், சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை வரலட்சுமி.

இவர் இப்போது சர்கார் ஷூட்டிங்குக்காக லாஸ் வேகாஸில் உள்ளார்.

சமீபத்தில் வரலட்சுமி, லிங்குசாமி இயக்கத்தில் விஷாலுடன் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் வரலட்சுமியின் போர்ஷன் முடிந்துவிட்டது.

அந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வரலட்சுமி, உங்களுடன் பணியாற்றியது மிகச்சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ரிலீசுக்கு வாழ்த்துக்கள்! என்னை அற்புதமாக உணரவைத்த ஒளிப்பதிவாளர் பரத்துக்கு நன்றி எனக் கூறி, என்சாய் பண்ணுங்க என ட்வீட் செய்துள்ளார்.

வரலட்சுமி ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் மதகஜராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கிறது. அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அக்டோபர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.