எனக்கு எல்லாம் இவர்தான் – ஜூலி வெளியிட புகைப்படம்

0
0
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜல்லிக்கட்டு போராட்டதில் பங்கேற்று முழக்கம் எழுப்பி வைரலான ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அவரின் நடவடிக்கை ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
 

இந்நிலையில், சமீபத்தில் அந்தமான் சுற்றுலா சென்ற அவர் அது தொடர்பான சில புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு வாலிபருடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு என் பெஸ்டி என குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்த சிலர் இவர்தான் உங்கள் காதலரா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

 

இதையடுத்து, மற்றொரு டிவிட்டில் என் வலிமை மற்றும் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ராஜா இவர்தான் என குறிப்பிட்டிருந்தார்.