எட்டு வழி சாலை திட்டம்; விவசாயிகள் கருத்தறிய முயற்சி செய்ததாக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 14 பேர் கைது

0
0

 சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளை சந்தித்துப் பேசியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது செய்யப்பட்டார்.

சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக அமையவுள்ளது. தற்போது இத்திட்டத்திற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று (சனிக்கிழமை) தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சென்னை – சேலம் பசுமை வழி சாலை தொடர்பாக விவசாயிகள் கருத்தறிய முயன்றார். அப்போது அங்கு வந்த எ.பள்ளிப்பட்டி போலீஸார், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 14 பேரை கைது செய்தனர்.