உ.பி. டு மதுரை..படப்பிடிப்பில் ரஜினி தீவிரம்

0
0

ரஜினியை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் கதைக் களத்தை உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி மதுரையில் முடிவது போல உருவாக்கி இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ‘காலா’ பட ரிலீஸுக்கு முதல் நாள் சென்னையில் இருந்து டார்ஜிலிங் புறப்பட்டார். தொடந்து அங்கு ஒரு மாத காலத்துக்கு படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி, வரும் 10-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

அடுத்தகட்டமாக டேராடூன் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 16-ம் தேதி மீண்டும் ரஜினிகாந்த் அடுத்த பயணத்துக்கு தயாராகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரிஷிகேஷ் பயணம் மேற்கொண்டது போல இந்தமுறை ஓய்வு நேரத்தில் பாபாஜி குகை, தான் அங்கே கட்டியுள்ள குருசரண் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுக்கும் திட்டமும் உள்ளதாம்.

டேராடூன் படப்பிடிப்பு முடிந்ததும், படத்தின் முக்கிய சில காட்சிகளை மதுரையில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படத்தின் நிறைவுப்பகுதி மதுரையில்தான் படமாக்கப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் தொடங்கி மதுரையில் முடிவதுபோலதான் படத்தின் கதைக் களத்தை உருவாக்கி இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.