உலக ஜூனியர் தடகள போட்டி: தங்க வென்று ஹிமா தாஸ் வரலாற்று சாதனை

0
0

இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜுனியர் பிரிவில் தங்க வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இதன் மூலம் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாவின் தந்தை ஒரு விவசாயி ஆவார்.

பின்லாந்தில் உலக ஜூனியர் தடகள போட்டிகள் நடந்து வருகிறது இதில் 400 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவின் இறுதிப் போட்டியில் 18 வயதான இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார்.

 

தங்கப்பதக்கத்துடன் ஹிமா தாஸ்

 

இந்த வெற்றி குறித்து ஹிமா தாஸின் பயிற்சியாளர் நிபான் தாஸ் கூறும்போது, “ஹிமாவின் முன்னேற்றம் அவரது திறமையைக் காட்டுக்கிறது.  ஹிமா முதல் மூன்று இடங்களில் பிடிக்காவிட்டாலும் வருத்தம் அடைந்திருக்க மாட்டேன்” என்றார்.

 

 

ஹிமாவுக்கு முன்னதாக உலக ஜூனியர் தடகளப் பிரிவில் சீமா புனியா, நவ்ஜித் கர் திலோன், வட்டு துக்கி ஏறிதலில் வெண்கல பதக்கமும், ஈட்டி ஏறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தனர். 

தங்கம் பதக்கம் வென்ற ஹிமா தாஸுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.