உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்களுடன் ஜாலியாக செல்ஃபீ எடுத்துக் கொண்ட ராஜஸ்தானியர்! | Rajasthan Man Takes Selfie With Dying Road Accident Victims!

0
0

ஜெய்பூர்!

ஜெய்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகரம். நேற்று ஜெய்பூரின் ஒரு சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று நபர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் அழைத்து காப்பாற்றாமல், சுற்றி நின்றுக் கொண்டிருந்த மக்கள் சிலர் புகைப்படங்கள் எடுத்தும், செல்ஃபி படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக ஒரு நபர், தனது செல்ஃபியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூவரின் உடலும் தெரியும்படியாக மிக ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தது, நாம் செல்ஃபிக்கு எத்தனை அடிமையாகி இருக்கிறோம் என்ற வருத்தத்தை ஏற்படுத்தியது.

Image Source: ANI

எ.என்.ஐ

எ.என்.ஐ

செய்தி சேகரிப்பு நிறுவனமான எ.என்.ஐ (ANI) நேற்று பகலில் சில படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதில் தான் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றாமல், சிலர் சுற்றி நின்று செல்ஃபி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் பதிவாகி இருந்தது.

Image Source: ANI

காப்பாற்றி இருக்கலாம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உதவி இருந்தால், அவர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று வேதனையுடன் தெரிவித்திருந்தனர். நீதிமன்றமே, விபத்தில் சிக்கியவருக்கு உதவினால், போலீஸ் வழக்கு பதிய முடியாது, மருத்துவமனைகள் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு எந்த அச்சமும் இன்றி மருத்துவம் செய்யலாம் என்று கூறிய பிறகும், இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது தொடர் கதையாக இருக்கிறது.

சமூகவியலாளர்கள்!

சமூகவியலாளர்கள்!

இந்த படங்களை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த நபர்கள் மீது கடுமையான கருத்துக்களை முன்வைத்தனர்.

சமூகவியலாளர்கள், இதுவும் ஒருவகையான போதை தான். இது மனநலம் சார்ந்த கோளாறு. எப்படி உணவுக்கு அடிமையானவர்கள், எங்கேனும் விருந்துக்கு சென்றால், கிடைக்காத உணவை மறுமுறை கிடைக்காது என்ற நிலையில் வேட்டையாடுவது போல உன்பார்களோ, அதே போன்றது தான் இந்த செல்ஃபியும், சில நிகழ்வு, சூழல், தருணம் கிடைக்காது என்று கருதி, அவர்கள் செல்ஃபி எடுப்பத்தில் அடிமையாகி விடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசு!

மத்திய அரசு!

இந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு மாநில அரசின் சுற்றுலா துறையிடம், எந்தந்த சுற்றுலா இடங்களில் அதிகமானோ செல்ஃபி எடுத்து விபத்துக்குள்ளாகிறார்கள் என்ற தகவல் அறிக்கையை கேட்டது. அந்த இடங்களை எல்லாம் ஒரு பட்டியலிட்டு, அங்கே செல்ஃபி எடுப்பது அபாயமானது என்று போர்டு தான் வைக்க வேண்டும்.

சமீபத்தில் கூட, பீச்சில் செல்ஃபி எடுக்க சென்று அலைகளால் இழுத்து செல்லப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்ததக்கது.

நோ செல்ஃபி சோன்!

நோ செல்ஃபி சோன்!

லோக் சபாவில் கூட யூனியன் உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் என்பவர், சுற்றுலா தளங்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நோ செல்ஃபி சோன் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதை அனைத்து மாநில அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைத்திருந்தார்.