உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவியேற்பு

0
0

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் விஜய கம்லேஷ் தஹில் ரமானியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு, ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.