உடம்புல இருக்குற மொத்த கொழுப்பையும் ஒரே வாரத்துல கரைக்கணுமா? இந்த ஜூஸ குடிங்க… | amazing health benefits of cucumber peels

0
0

பலன்கள்

சுவையற்ற நீர்ச்சத்தும், கடினமான தோலையும் கொண்ட வெள்ளரிக்காயை உட்கொள்வதற்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குள் பொதிந்து கிடக்கும் ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி சமைக்கும். விட்டமின் ஏ மற்றும் சி குறைபாடுகளை பூர்த்தி செய்யக்கூடிய வெள்ளரிக்காய், கண் கோளாறு, மலச்சிக்கல், எலுமபு மஜ்ஜைகள் மற்றும் தசை பிடிப்புகளை சரி செய்யக் கூடியது. வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிடுவது எப்படி…

வெள்ளரித்தோல் பேஸ்ட்

வெள்ளரித்தோல் பேஸ்ட்

மைய அரைக்கப்பட்ட வெள்ளரிக்காய் பேஸ்ட் 2 கிராம். ஒரு டீஸ்பூன் தேன், கறுப்பு மிளகு மில்லி 125 மில்லி கிராமுடன் கலந்து குடிக்க ஜீரண சக்தி அதிகரிக்கும். குடல்களில் இருந்து ரத்த ஓட்டத்தை சீராக்கி ஊட்டச்சத்து பானமாகத் தயாரித்து குடித்தால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன, சுவைக்காக (சுவை மிகுதியாக) வேண்டுமென்று நினைத்தால் அதில் வேண்டுமானால் தேனும் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்

தோலுடன் வெள்ளரிக்காய் ஜூஸ்

தோலுடன் வெள்ளரிக்காய் ஜூஸ்

தோலை அகற்றி விட்டு வெள்ளரிக்காய் ஜூஸ் தயாரித்து குடிப்பதால் பலன்களை போதுமான அளவில் பெற முடியாது. தோலுடன் கூடிய வெள்ளரி ஜூஸை எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையாக குடிப்பதற்கு சர்க்கரை, உப்பு சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை

மலச்சிக்கலுக்கு தீர்வு

மலச்சிக்கலுக்கு தீர்வு

வெள்ளரிக்காயுடன் சாலட் கலவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அதிகமான நார்ச்சத்து இருக்கிறது. நாளொன்றுக்கு ஒரு ஆண் 35 கிராமும், பெண் 25 கிராமும் நார்ச்சத்து உள்ள பொருட்களை உண்ண வேண்டும். இது ஒரு மேம்பட்ட டயட்டுக்கு உதவும். நார்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், குடலில் எளிதில் கரையக்கூடியது. மலமிளக்கியாக இருப்பதால் விரைவில் ஜீரணமாகும்.

வெள்ளரித்தோல் 5 கிராம், தண்ணீர் 100 மில்லி, தேன் 2 டீஸ்பூன்

வெள்ளரி பேஸ்டுடன் இவற்றை ஒன்றாகச் சேர்த்து, தேனுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மலச்சிக்கல் தீரும். இது குடலில் சேர்ந்துள்ள மலத்தை முழுமையாக வெளியேற்றி சுத்தப்படுத்தக்கூடியது.

பார்வை திறன்

பார்வை திறன்

இளம் பச்சை மற்றும் கலர்புல்லான காய்கறிகளில் உள்ள கரோட்டின் என்ற சத்து, வெள்ளரிக்காய் தோலில் உள்ளது. இது மங்கலான பார்வைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. தோலுடன் கூடிய வெள்ளரியில் 110 ஐ.யூ அளவுள்ள விட்டமின் இருக்கிறது. தோலுடன் கூடிய 100 கிராம் வெள்ளரிக்காயில் 100 மைக்ரோ கிராம் விட்டமின் பொதிந்துள்ளது.

உடல் உடை இழப்பு

உடல் உடை இழப்பு

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது அதில் உள்ள நார்ச்சத்து குடலில் பாரமாக உள்ள அனைத்தையும் அறவே நீக்குகிறது. காய சண்டிகை பசியை தடுக்கிறது. ஆகையால் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர எடையிழப்பை உணரலாம்

விட்டமின் கே

விட்டமின் கே

தோலுடன் கூடிய 100 கிராம் வெள்ளரிக்காயில் 100 நூறு மைக்ரோ கிராம் அளவுக்கு விட்டமின் கே மிக அதிக அளவில் உள்ளது. ஆனால் நாம் தோலை அப்புறப்படுத்தி விட்டு வெள்ளரியை சாப்பிடுகிறோம். விட்டமின் கே, எலும்பு ஆரோக்கியத்துக்கும், ரத்த உறைதலுக்கும் பயன்படுகிறது. மேலும் உடலில் செல்களின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. ஆகையால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.