ஈஸ்வரி ராவ் போட்ட கணக்கு நடந்தது

0
66

ஈஸ்வரி ராவ் பற்றி தனுஷ் சொன்ன விஷயம் பொய்யாகிவிட்டது. 16 வயதில் நடிக்க வந்தவர் ஈஸ்வரி ராவ். ஓவர் கிளாமர் காட்டி நடிக்க விரும்பாததால் ஹீரோயினாக தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் 44 வயதில் அவர் ரஜினியின் ஹீரோயினாக நடித்துள்ளார். காலா படத்தில் ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

காலா படத்தில் ஈஸ்வரி ராவ் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார். கணவருக்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்தது தெரிந்தும் அது குறித்து நோண்டி நோண்டி கேள்வி கேட்காத வித்தியாசமான மனைவியாக நடித்து அசத்தியுள்ளார் ஈஸ்வரி ராவ்.

காலா படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று ஈஸ்வரி ராவ் நம்பியது வீண் போகவில்லை. இனி அவரை அடிக்கடி பெரிய திரையில் பார்க்க முடியும் என்று நம்புவோமாக.

காலா தயாரிப்பாளரான தனுஷ் நடித்த சுள்ளான் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் ஈஸ்வரி ராவ். தனுஷ் தனது தலைவரின் புகைப்படத்தை வீட்டில் ஒட்டுவதை பார்ப்பார். அதற்கு தனுஷோ, தலைவரை சைட் அடிக்கிறியா உன் மகுடிக்கு எல்லாம் இந்த மலைப்பாம்பு மயங்காது என்பார். அழகு தான் நீயும், உன் தலைவனும் என்று அலுத்துக் கொள்வார் ஈஸ்வரி ராவ்.

ஈஸ்வரி ராவின் மகுடிக்கு ரஜினி என்னும் மலைப்பாம்பு மயங்காது என்றார் தனுஷ். ஆனால் அவர் தயாரிப்பிலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிட்டார் ஈஸ்வரி ராவ்.