இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்ட 18 பசு மாடுகள் மூச்சு திணறி பலி: சத்திஸ்கர் பசு பாதுகாப்பு மையத்தில் பரிதாபம்

0
0

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊராட்சி நடத்தி வரும் பசு பாதுகாப்பு மையத்தில், இருட்டு அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட 18 பசு மாடுகள் மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

பசு மாடுகளை இறைச்சிக்காக கொல்லப்படுவதாக கூறி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து சத்தீஸ்கர் மாநில பாஜக அரசும், தனியாருடன் இணைந்து பல்வேறு இடங்களில் கோசாலைகள் எனப்படும் பசு பாதுகாப்பு மையங்களை நடத்தி வருகின்றன.

துர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் பாஜக பிரமுகர் நடத்திய கேசாலையில் அடுத்தடுத்து 200 பசு மாடுகள் உயிரிழந்தன. பசுக்களுக்கு போதிய உணவு வழங்காததால் பசிக்கொடுமையாகல் அவை உயிரிழந்தன. இதையடுத்து அந்த கோசாலைகள் மூடப்பட்டன.

இந்தநிலையில், பலோடாபஸார் மாவட்ட கிராமத்தில் ஊராட்சி சார்பில் நடத்தப்படும் மாடுகள் பாதுகாப்பு மையத்தில் காற்று மற்றும் சூரிய ஒளி புகாத அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 18 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன. மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் நேற்று அதனை ஊர் மக்கள் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது 18 மாடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாடுகளின் உடல்களை டிராக்டரில் ஏற்றி மைதானத்தில் புதைத்தனர். இந்த தகவல் சற்று தாமதமாக தெரிய வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர்.

இறந்த பசு மாடுகள் வேறு ஏதேனும் நோய் காரணமாக உயிரிழந்து தொற்று கிருமி மற்ற விலங்களுக்கும் பரவும் என்பதால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் அந்த மாடுகள் உயிரிந்ததாக ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கர் ஊரில் சுற்றித் திரியும் மாடுகளால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் புகார் கூறியதால் சட்டீஸ்கர் மாநிலத்தில் சாலைகளில் கேட்பாரற்று சுற்றி திரியும் மாடுகளை பாதுகாக்க, ஊராட்சிகள் சார்பில் பாதுகாப்பு மையங்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஒரு மையத்தில் தான், தற்போது 18 மாடுகள் உயிரிழந்துள்ளன.