இரண்டு கால்பந்து உலக சாதனைகள்: அதிசயிக்க வைத்த ஆஸி. கிராமப்புற வீரர்

0
0

கால்பந்தில் நம்பமுடியாத, அதிசயிக்கவைக்கும் திறமைகளை வெளிப்படுத்திய ஜெட் ஹாக்கின் என்ற 18 வயது கிராமப்புற ஆஸி. இளைஞர் 2 கின்னஸ் உலகச்சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

முதலில் ‘ரபோனா’ ஸ்டைல் உதை என்ற ஒரு தனித்திறமையில் ஹாக்கின் 2 கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தினார். இவர் அடித்த ரபோனா ஸ்டைல் உதை ஒருநிமிடத்தில் இவர் அடித்த 7 ஷாட்கள் கிராஸ்பாரை அடித்துத் திரும்பியது. பிறகு 60 அடி தூரத்திலிருந்து அடித்த ஷாட் கோல் வலையைத் தாக்கியது.

இந்தச் சாதனைகளை ஞாயிறன்று நிகழ்த்தினார் ஜெட் ஹாக்கின்.

ரபோனா ஸ்டைல் உதை என்பது வலது காலை பின்புறமாகக் கொண்டு சென்று பந்தை உதைக்கும் முறையாகும், ஒரு கால் பின்னால் ஒரு காலை பின்பக்கமாக வளைத்து பந்தை அடிப்பதாகும், இது மிகவும் கடினமான ஒன்று, அதாவது எதிரணி வீரர்களை ஏமாற்றவும், கோல் கீப்பரை தவறான திசைக்கு நகரவைக்கவும் இந்த உத்தி கைகொடுக்கும் என்கிறார் ஜெப் ஹாக்கின். உதாரணமாக இடது காலால் உதைக்கப் போகிறார் என்று நினைக்கும் நேரத்தில் வலது காலை பின்பக்கமாக வளைத்து பந்தை உதைப்பது நிச்சயம் எதிரணியினரையும், கோல் கீப்பரையும் குழப்பும் செயலாகும், இந்த அரிய திறமையை வெளிப்படுத்தி கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் ஜெப் ஹாக்கின்.

கடந்த வாரம் இந்த 18 வயது இளம் கால்பந்து திறமையாளரான ஜெப் ஹாக்கினின் ‘ட்ரிக் ஷாட்’ மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மேட்ரிட் ரசிகர்கள் பக்கத்தில் வீடியோவாக பகிரப்பட்டு இணையதளத்தில் ஒரு நட்சத்திரமாக உயர்வு பெற்றார்.

இவரது திறமையைப் பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னணி கோல் ஸ்கோரர் டிம் காஹில் வீடியோவில், “நான் ஹாக்கினை ஆரம்பத்திலிருந்தே பாராட்டி வருகிறேன், இப்போது அவரது சாதனைகளுக்காக பெருமையடைகிறேன்” என்றார்.

சுமார் 10 ஆண்டுகளாக இவர் இந்தப் புதிய உத்திகளை, திறமைகளை பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.

“ஒன்றுமில்லாத ஓர் இடத்திலிருந்து தொடங்கினேன், அதன் பிறகு கடும் பயிற்சியில் இம்மாதிரியான பைத்தியக்காரத்தனமான உத்திகளெல்லாம் கைகூடியுள்ளது, அதாவது கால்பந்தில் எதுவும் சாத்தியமே என்ற நம்பிக்கையை எனக்கு இது அளிக்கிறது” என்கிறார் இந்த அதிசய வீரர் ஜெட் ஹாக்கின்.