இரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும் | 6 precautions for twin pregnancy women

0
0

1. உணவு

மறந்துவிடாதீர்கள் இப்பொழுது நீங்கள் மூன்று பேருக்கு சாப்பிட வேண்டும். ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும்போது சராசரியாக ஒரு நாளைக்கு 300 கலோரிகள் தேவைப்படும். இப்பொழுது நீங்கள் சுமந்துகொண்டிருப்பது இரட்டை குழந்தைகளை ஆதலால் 600 கலோரிகள் தேவைப்படும். எனவே அதற்கேற்றாற்போல் சாப்பிட வேண்டும். அதற்காக கலோரிகள் அதிகமுள்ள கொழுப்பு உணவுகளை உண்ணாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவருடன் ஆலோசித்து உங்களுக்கு தேவைப்படும் உணவு அட்டவணையை தயாரித்துக்கொண்டு அதை பின்பற்றுங்கள்.

2. அதிக ஆபத்து

2. அதிக ஆபத்து

இது உங்களை பயமுறுத்துவதாக இருந்தாலும் இதுதான் உண்மை. இரட்டை குழந்தைகள் பிரசவத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் மருத்துவர்களின் துணையுடன் அவற்றை எளிதில் கடந்துவிடலாம். போதுமான அளவு ஓய்வு, சத்தான உணவு, முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் மகிழ்ச்சியான மனநிலை, உங்களின் இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பெற்றெடுக்க இந்த நான்கும் மிகவும் அவசியம்

3. ஆர்வம்

3. ஆர்வம்

நிச்சயமாக உங்களுக்கு குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்கள் ஒத்த இரட்டையர்களாக இருப்பார்களா அல்லது மாறுபட்ட இரட்டையர்களாக இருப்பார்களா, எந்த குழந்தை யாரை போல இருக்கும் என பலவித கனவுகளும், குழப்பங்களும் உங்கள் மனதில் இருக்கும். இந்த ஆர்வத்தால் ஆரோக்கியத்தை கோட்டை விட்டு விடாதீர்கள். உங்கள் குழந்தைகள் ஒரே தொப்புள்கொடியை பகிர்ந்துகொண்டிருந்தால் பெரும்பாலும் அவர்கள் ஒத்த இரட்டையர்களாகவே இருப்பார்கள். ஒத்த இரட்டையர்களோ அல்லது மாறுபட்ட இரட்டையர்களோ எதுவாக இருப்பினும் அவர்கள் இருவருமே உங்களுக்கு கிடைத்த பரிசுதான்.

4. அதிக மருத்துவ சோதனை

4. அதிக மருத்துவ சோதனை

இரட்டை குழந்தைகளை சுமக்கும் பெண்கள் அடிக்கடி மருத்துவர்களை சந்திக்க நேரிடலாம். மருத்துவர்களிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை சோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தையும் மருத்துவரிடம் மறைக்காமல் கூறவேண்டும். அது குழந்தைகளை பற்றியதோ அல்லது உடலுறவு பற்றியதோ எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வது அவசியம். மற்ற பெண்களை காட்டிலும் நீங்கள் அதிக முறை மருத்துவரை சந்திப்பது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உங்களுக்கும் உங்கள் இரட்டை குழந்தைகளுக்கும் நல்லது.

5. உடல் எடை

5. உடல் எடை

இரட்டை குழந்தைகளை சுமக்கும்போது உங்கள் எடை முன்பை விட நிச்சயம் அதிகரிக்க வேண்டும், அதே சமயம் அதிகளவு எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தல் மற்றும் குறைதல் இரண்டுமே பிரச்சினைதான். எனவே அதற்கேற்றாற்போல் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 600 கலோரிகள் தினமும் எடுத்துக்கொள்வது உடல் எடையில் சீரான முன்னேற்றத்தை தரும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஆனால் தூங்க போகும் முன் வேண்டாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க விழிப்பது உங்கள் உறக்கத்தை கெடுக்கும். இது மூன்று பேரின் ஆரோக்கியத்தையுமே பாதிக்கும்.

6. குறைப்பிரசவம்

6. குறைப்பிரசவம்

இரட்டை குழந்தை பெற்ற பெண்களில் 60% பெண்களுக்கு குறைபிரசவமே நிகழ்ந்துள்ளது. அதற்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை, 36 வாரங்களுக்கு பின் பிறக்க வேண்டிய குழந்தை 32 வாரங்களில் பிறக்கிறார்கள் அவ்வளவுதான். அதுவும் 10% மட்டும்தான் இது போன்று நிகழ வாய்ப்புகள் உள்ளது. எனவே குழந்தை பிறக்கும் நேரத்திற்கேற்ப உங்களின் வளைகாப்பு மற்றும் இதர சடங்குகளை வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான துணி, பொம்மைகள், மருந்துகள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து வரப்போகும் உங்கள் செல்லக் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராய் இருங்கள்.