இப்படியும் சில மனிதர்கள்… மனதை உருகவைக்கும் புகைப்படங்கள்! | Photos Proves That Humanity is Still Exist!

0
0

#1

உலகில் அதிகாரத்துவம் நிறைந்த உயிரினமாக திகழ்வது மனிதர்கள் தான். நாம் இந்த உலகின் இயற்கை மற்றும் பிற உயிரினங்களை காக்கும் பொறுப்பில் இருக்கிறோம். அது பெரியதா? சிறியதா என்பதல்ல கேள்வி.. ஒரு இடத்தை, பொருளை, ஊயிரை நாம் உலகில் இருந்து அழியாமல் இருக்க முயற்சி எடுக்கிறோமா? என்னதான் மனிதனால் தன் இந்த உலகம் இத்தனை அழிவுகளை கண்டிருக்கிறது என்று கூறினாலும், அதே மனிதன் தான் மறுபுறத்தில், இராணுவ வீரனாக, தீயணைப்பு வீரானாக, இயற்கை பாதுகாவலனாக இருந்து போராடி காப்பாற்றி வருகிறான். இதோ! ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தின் போது, விலங்குக்கு நீர் கொடுத்து உதவும் தீயணைப்பு வீரன்.

Image Source

#2

#2

பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பது நாம் காலம், காலமாக பேச்சுவழக்கில் பயன்படுத்தி வரும் பழமொழி. பணம் இல்லாமல் இங்கே ஒரு அணுவும் அசைவதில்லை.. சில நேரங்களில் மனித நேயம் உட்பட. பணம் இல்லாத காரணத்தால் இறந்த மனைவியின் உடலை கண்ணீருடன் கிலோ மீட்டர் கணக்கில் தோளில் சுமந்து வந்த வேதனையான காட்சிகளை கண்டவர்கள் நாம். ஆனா, இதே உலகில் கிடைத்த பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த சிறுவனை பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். இதோ! டாமினோஸ் பிட்சாவில் சிக்கன் ஆர்டர் செய்த நபருக்கு டெலிவரி செய்யப்பட்ட பாக்ஸில் பணம் இருந்தது. அதை அந்த கிளையின் வங்கி கணக்கில் சரியாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார் இந்த நபர்.

Image Source

#3

#3

இங்கே ட்ராபிக் போலீஸார் இருப்பது போல, வெளிநாட்டில் பள்ளி அமைந்திருக்கும் இடங்களில் க்ராஸிங் கார்ட் என்று ஒருவர் இருப்பார். அவர், குழந்தைகள் சாலையை கடக்கும் போது, வாகனங்களை நிறுத்தி எளிதாக, விபத்து ஏற்படாமல் சாலையை கடக்க உதவுவார். இந்த வேலை செய்து வந்த ஒரு நபர், பள்ளிக்கு தேவையான நோட்டு, புஸ்தகம், பேனா , பென்ஸில் போன்றவற்றை வாங்க போதிய வசதி இல்லாத குழந்தைக்கு, தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி, அந்த குழந்தை வசிக்கும் இடத்தின் முன் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

Image Source

#4

#4

சார்லஸ் அல்ஸ்டான் 25 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற ஒரு கைதி. இவருக்கு இந்த தண்டனையை கொடுத்து தீர்ப்பளித்த நீதிபதி தான் ஃபாக்ஸ். ஆனால், செய்தியின் மூலமாக தனக்கு தண்டனை அளித்த நீதிபதி அபாயமான உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்படுவதை அறிந்த சார்லஸ், உடனடியாக அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், உங்களுக்கு தேவையான போன் மேரோவை நானே தானம் செய்ய தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Image Source

#5

#5

பொதுநலம் கொண்ட ரெஸ்டாரன் பணியாளர் ஒருவர், தீயணைப்பு துறையில் வேலை செய்யும் நபர்கள் சாப்பிடும் உணவுக்கு தானே முன்வந்து பில் கட்டி உதவி வந்திருக்கிறார். அன்றைய தினத்தில் தான் உண்ட உணவிற்கு பணம் தானம் செய்திருந்த அந்த பெண்ணுக்கு, அந்த பில் தாளிலேயே தனது நன்று கடிதத்தை எழுதி பதில் அனுப்பி இருக்கிறார் இந்த தீயணைப்பு வீரர்.

#6

#6

சிரியாவில் போர் நடக்கும் காரணத்தால் அகதிகளாக அந்நாட்டு மக்கள் அருகாமை நாடுகளில் தஞ்சம் புக துவங்கினார்கள். அந்த சமயத்தில் சிரியன் அகதிகள் ஹன்கேரியா நாட்டுக்கு வந்துக் கொண்டிருப்பதை அறிந்த ஹன்கேரியா மக்கள், சிறுவர், பெரியவர் என்று வயது பேதமின்றி, அவர்களுக்கு தேவையான காலணிகளை அவர்கள் வந்து சேரும் இடத்தில் வைத்து சென்றனர்.

Image Source

#7

#7

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அனைத்து மத பிரிவினர் இடையேயும் எதிர்ப்பு காணப்படுகிறது. தங்கள் மன கோட்பாடுகளை முன்வைத்து அவர்களை எதிர்க்கிறார்கள். சிலர் அவர்களை ஏற்றுகொள்வது போவது கூறினாலும்… பொறுத்துக் கொள்கிறார்களே தவிர, உண்மையாக தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வெகு சிலரிடம் மட்டுமே காணப்படுகிறது. அந்தவகையில், ஒரு சர்ச்சை சேர்ந்தவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு, அவர்கள் மனவருத்தத்திற்கு தாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கூறி மனிப்பு பதாகைகள் மற்றும் உடையணிந்து வந்து, அவர்களுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

Image Source

#8

#8

ஈராக் போரின் இடையே யாருக்கும் எந்த துன்பமும் நடந்துவிட கூடாது என்று கூட்டாக நின்று பிரார்த்தனை செய்த இராணுவ போர் வீரர்கள். இது மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மட்டமின்றி, கடவுளின் மீதான நம்பிக்கையும் வலிமையடைவதை உணர்த்தும் படமாக அமைந்திருக்கிறது.

Image Source

#9

#9

பிரேசிலில் உள்நாட்டு பிரச்சனைகளுக்காக சண்டையிட்டு, போராட்டம் நடத்தி வந்த மக்கள்… அங்கே வந்த ஜெனரல் அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க சண்டையை கைவிட்டனர். தயவு செய்து சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்… என் பிறந்தநாள் அன்றாவது இதை வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என மனமுருகி கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்கி மக்கள், போராடுவதை கைவிட்டு அவரது பிறந்தநாளுக்கு கேக் ஊட்டி கொண்டாடினார்கள்.

Image Source

#10

#10

சம்பளம் குறைவாக இருந்தாலுமே கூட… மனித நேயத்தின் அடிப்படையில்… மெக் டொனால்ட் ஊழியர் ஒருவர் உணவருந்த வந்திருந்த முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த முதியவருக்கு உணவை ஊட்டிவிட்டு நெகிழ்ச்சியாக நடந்திக் கொண்டிருந்தார்.

Image Source

#11

#11

இன்றைய உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படும் விஷயம் பஞ்சம், பட்டினி மட்டும் தான். சுற்றுலா பயணி ஒருவர், அந்நாட்டை சேர்ந்த ஏழை பெண் ஒருவருக்கு தனது காலணிகளை கொடுத்து உதவுகிறார். இந்த நாட்டில் விலங்குகள், நீர் நிலைகள், இயற்கை என எது அழிந்தாலும் மனித நேயம் அழியாமல் இருந்தால், இழந்த எதை வேண்டுமானாலும் மீட்டு எடுக்கலாம்.

Image Source