இன்றைக்கு ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?… | horoscope for 14 July 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

0
0

மேஷம்

பணியில் உள்ளவர்களுக்கு உங்களுக்குச் சாதகமான சூழல் உண்டாகும். உடலுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த வீண் கவலைகள் நீங்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட நிறமாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கிறது.

ரிஷபம்

ரிஷபம்

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். புதிய நபர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பொருள் வரவு உண்டாகும். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். இன்று உங்களுக்குப் திர்ஷ்டம் வழங்கும் எண்ணாக 3 ம்அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கச் செய்யும். தொழில் விருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

செய்யும் தொழிலில் மேன்மையான சூழல் அமையும். தொழிலில் புதிய புதிய முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் போடும் வாய்ப்புகள் உண்டாகும். வீட்டுப் பராமரிப்பு பணிகளை தொடங்கி வெற்றிகரமாக முடிப்பீர்கள். வுலை சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் உண்டாகும். பல புதிய புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக இருக்கக்கூடிய எண் 2.அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்டத்தை தரும் நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதரவினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர் பதவிகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தேவையில்லாத வாக்கவாதங்களின் மூலமாக மனக்கசப்புகளை சம்பாதிக்க நேரிடும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ் நிறம் 5, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த பச்சை.

கன்னி

கன்னி

வாகனப் பயணங்களில் உங்களுக்குப் புதுவிதமான அனுபவங்கள் உண்டு. குழப்பமான எண்ணங்களினால் உங்களுக்கு மனச்சோர்வு உண்டாகும். தொழிலில் உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவு செய்வீர்கள். கணவன், மனைவிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கப்போகிறது.

துலாம்

துலாம்

நண்பர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற உறவினர்குளின் நினைவுகள் வந்து போகும். வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு புதுவிதமான மாற்றங்கள் செய்வீர்கள். எதிர்பாராத பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுக்குத் தேவையான அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

புத்துணர்ச்சி பொங்க பல புதிய திட்டங்களைத் தொடங்கும் முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் தோன்றிய மனக்கசப்புகள் அகலும். பிரிந்துபோன நண்பர்கள் ஒன்றிணைவதற்கான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பிற்கான உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

வியாபாரத்தில் எதிர்பார்த்த அனுகூலமான சூழல் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்கிளனால் எண்ணியதை அடைவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவிகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுக்குத் தேவையான அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

குடும்பப் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் மூலம் உண்டான இன்னல்கள் குறையும். தேவையில்லாத செலவுகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். ஆன்மீக வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று மனதை அமைதிப்படுத்த முயல்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப்போகிறது.

கும்பம்

கும்பம்

பயணங்களில ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். பெரியோர்களின் ஆதரவினால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சியில் இருந்து வந்த இழுபறி நிலை நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கிறது.

மீனம்

மீனம்

திருமணப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகிறது. உறவினர்களுடைய வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளினால் பிரபலங்களினுடைய உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில்நீல நிறமாகவும் இருக்கும்.