இன்னைக்கு யாருக்கு சந்திராஷ்டமம்?… யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்? | horoscope for 06 August 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

0
1

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளாலட பெருமைகள் வந்து சேரும். மனைவியின் வீட்டுவழியிலான உறவினர்களின் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பயணங்களின் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 – மே 20

வேலையால் உங்களுடைய அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்கு உண்டாகும் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகயும் உங்களுக்கு மனக்கசப்பைத் தரும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக மிதமான பச்சை நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

வியாபாரங்களின் மூலமாக உங்களுக்கு பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்பட்ட பல பிரச்னைகளும் நீங்கும். நீண்ட நாட்களாக நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியங்களை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிவர்த்தியாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் – 22 ஜூலை

எந்த கடினமான செயலையும் வெகு எளிதாக செய்து முடித்து விடுவீர்கள். பொருளாதார வளர்ச்சி மேம்படும். காதில் கிடைக்கும் சுப செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை – 21 ஆகஸ்ட்

அரசு தொடர்புடைய செயல்பாடுகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுய தொழில் செய்கின்றவர்கள் வேலையாட்களை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரங்களில் போராடி பெரும் லாபம் ஈட்டுவீர்கள். பிறருக்கு உதவி செய்வது நல்லது தான். ஆனால் அதற்கு முன் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

நீங்கள் திட்டமிட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவு முறைகளில் உள்ள சகோதர சகோதரிகளின் மூலமாக உங்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வாகனங்களை சர்வீஸ் செய்து, பழுது நீக்கி புதுசுபோல் வைத்திருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் சில பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

உங்களுடைய பழைய நண்பர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் உங்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். நெருங்கியவர்களின் விமர்சனங்களினால் மன வருத்தங்கள் உண்டாகும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பேசுகின்ற போது கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். தொழிலில் போடப்படும் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களுடைய புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

இன்றைய அலுவலகப் பணிகளை மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொத்து சம்பந்தப்பட்ட பாகப் பிரிவினைகளில் உங்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுடன் இருப்பவர்கள் உங்களுடைய குணம் அறிந்து செயல்படுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் – 20 ஜனவரி

வாழ்க்கையின் தேவைகளை ஒவ்வொன்றாகப் பூா்த்தி செய்வீர்கள். மனதுக்குப் பிடித்த நபர்களால் வீண் விரயச் செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் செயல்களைப் பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பதைத் தவிர்க்கவும். மனைவியினுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நண்பர்களின் மூலமாக தொழிலை விருத்தி செய்ய உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

தொழில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் உள்ள தடைகளை தாண்டி, முன்னேற்றம் அடைவார்கள். கணவன், மனைவிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். நீங்கள் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீங்களே எதிர்பார்க்காத சில விஷயங்களால் மன மாற்றங்கள் உண்டாகும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி – 20 மார்ச்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். நீங்கள் மனதில் நினைத்த எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பிறருக்கு செய்த உதவிகளால் வாழ்ககையில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளுடைய வழியில் சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.