இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி வங்கதேசம்: அபார வெற்றியை நோக்கி மே.இ.தீவுகள் அணி

0
0

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி வங்கதேசம் சென்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை முறியடிக்க இன்னும் 261 ரன்கள் வங்கதேசம் எடுக்க வேண்டும். ஆனால், கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், இன்று ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நார்த்சவுண்ட் நகரில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீமர் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சதம் அடித்த மேஇதீவுகள் வீரர் பிராத்வெய்ட்

 

முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 137.3 ஓவர்களில் 406 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெய்ட் சதம் அடித்து 121 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் (58) ரன்களும், ஹோப் (67) ரன்களும் சேர்த்தனர்.

வங்கதேசம் தரப்பில் ஜெயித், மிராஸ் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.