இனி தமிழ்நாட்டில் யாராவது மொட்டை கடுதாசி எழுதுவாங்க? | Dani is irritating to the core yesterday

0
0

சென்னை: மொட்டை கடிதம் எழுதிய டேனி மீது பிக் பாஸ் 2 பார்வையாளர்கள் கொலவெறியில் உள்ளனர்.

பிக் பாஸ் 2 வீட்டில் வைத்த புகார் பெட்டியில் கமல் ஹாஸன் பெயருக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கமலிடம் அளித்தனர். கமலோ கடிதத்தை எலிமினேஷன் பெயர் இருக்கும் கவரில் வைத்து எடுத்து வந்தார்.

போட்டியாளர்களை பார்த்து நேரடியாக எலிமினேஷனுக்கு போய்விடலாம் என்றார். அதை கேட்ட போட்டியாளர்கள் சிரித்தாலும் அவர்கள் முகத்தில் டென்ஷன் இருந்தது.

பொன்னம்பலம்

சும்மா உங்களுடன் விளையாடினேன் என்று கூறிவிட்டு பொன்னம்பலம் பற்றி எனக்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது, அதை எழுதியது யார் என்று கூறினால் அவர் பெரிய மனிதன், இல்லை என்றால் வெறும் மனிதன் என்றார். உடனே டேனி அது நான் தான் சார் என்று நல்ல பிள்ளையாக கையை தூக்கினார். பொன்னம்பலம் செய்வதறியாது சிரித்து மழுப்பிக் கொண்டிருந்தார்.

கடிதம்

கடிதம்

அந்த கடிதத்தில் டேனி கூறியிருப்பதாவது, இன்னும் பெண்களை தப்பாக பேசிக்கிட்டுத் தான் இருக்கிறார் பொன்னம்பலம். என்னை பற்றி ரொம்ப தப்புத் தப்பா கமல் சாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். எல்லாமே அவருடைய பொய்த்தனம். இப்பவும் அவர் தொடர்ந்து தப்பு பண்ணிக்கிட்டே தான் இருக்கிறார் என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தை கமல் வாசித்தார்.

பொய்

பொய்

கடிதத்தில் எழுதியது உண்மையா, பொய்யா என்று கேட்க இப்போ இது பொய் என்றார் டேனி. அவர் சொன்னதை கேட்டு கமல் மட்டும் அல்ல அனைவருக்குமே குழப்பம் ஏற்பட்டது. கடிதத்தில் எழுதியது பொய் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் டேனி. பொய் என்றால் அதை எதற்காக கடிதமாக எழுதி பார்வையாளர்களாகிய எங்களை சாகடிக்கிறீர்கள் டேனி.

குழப்பம்

குழப்பம்

டேனியின் பேச்சை கேட்ட கமல் இனி எதற்கு இந்த கடிதம் என்று அதை தூக்கி வீசிவிட்டார். மொட்டை கடிதம் எழுதியதற்கு ஒரு மொக்கை விளக்கத்தை அளித்து சமாளித்தார் டேனி. கடிதம் குறித்து குழம்பிய கமல் நான் வீட்டிற்கு சென்று யோசித்துவிட்டு வந்து கூறுகிறேன் என்றார். இப்ப என்னதான்யா சொல்ல வர்ற டேனி. அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என நினைக்கிறார் என்று போட்டியாளர்கள் கூறியது மிகவும் சரியே. அதை தான் மொட்டை கடிதம் மூலம் செய்துள்ளார் டேனி.