இந்த மனுஷனை வெளியேற்ற தான் கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாரா? | Why is Kamal seen inside Bigg Boss 2 Tamil house?

0
0

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று பொன்னம்பலம் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 2 வீட்டில் வாரா வாரம் நாமினேட் ஆகி கடைசி நேரத்தில் தப்பித்துக் கொள்பவர் சித்தப்பு பொன்னம்பலம். சும்மா சொல்லக் கூடாது டி சர்ட் டாஸ்கின்போது மகத் போன்று சூப்பராக நடித்தார்.

ம்ஹூம், மகத்தாகவே மாறிவிட்டார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது பொன்னம்பலம் தான் என்று கூறப்படுகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

நான் ஏன் வந்தேன் என்று காரணம் சொல்கிறேன் என கமல் கூற, பொன்னம்பலமோ, பாலாஜி அவ்வப்போது சொல்வார் சார், நீங்க போவது மாதிரி தெரியல, கமல் சார் வந்து கூப்பிட்டுப் போவார் என்றார் என கூறினார்.

மேலும் இந்த வாரம் வெளியேறுபவரின் பெயர் அடங்கிய கார்டை பொன்னம்பலம் பார்த்துவிட்டு டன் டடன் டடன் என்று மியூசிக் போடுகிறார். ப்ரொமோவில் என்னவோ பொன்னம்பலம் வெளியேறுவது போன்று தான் சூசகமாக காட்டியுள்ளனர். ஆனால் வழக்கமாக ப்ரொமோவில் காட்டுவதற்கு நேர் எதிராகத் தான் நிகழ்ச்சி இருக்கும் என்பதால் இதை நம்ப முடியாது.

இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மையில் வெளியேறுபவர் யார் என்பது தெரியும்.