இந்த நடிகைக்கு போட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலையா.. ரசிகர்கள் கிண்டல்! | Karishma Sharma’s Bathtub Photo

0
0

சென்னை : நடிகை கரிஷ்மா சர்மா மீண்டும் குளியலறைத் தொட்டில் படுத்துக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் இந்தியில் வெளியான வெப் சீரியல் ‘ராகினி எம் எம் எஸ்’. இந்த வெப் சீரியல் மிகுந்த கவர்ச்சியுடன் இருந்ததால் சர்ச்சையில் சிக்கியது. இதில் ராகினியாக நடித்தவர் பிரபல சீரியல் நடிகை கரிஷ்மா சர்மா. இவர் இந்த சீரியலில் படுகவர்ச்சியாகவும், ஹீரோவுடன் நெருக்கமாகவும் நடித்திருந்தார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் படங்களை வெளியிடும் இவர், கடந்த மாதம் பாத்ரூமில் பாத்டப்பில் படுத்த படி கவர்ச்சி உடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

ரசிகர்கள் ஹேப்பி:

இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சுமார் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை பார்த்து லைக் செய்திருந்தனர். 450க்கும் மேற்பட்டோர் கமெண்ட் பதிவு செய்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், இனி வரும் நாட்களில் இதேபோன்று மேலும் பல பாத்ரூம் போட்டோக்களை கரிஷ்மா வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் கரிஷ்மாவின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எல்லை தாண்டும் படங்கள்:

எல்லை தாண்டும் படங்கள்:

சமீபகாலமாக நடிகைகள் இது போன்று தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் அவர்கள் கொஞ்சம் எல்லை தாண்டுவது போல அமைந்து விடுகிறது.