இந்த தொழில் செய்ய பிடிக்கல, ஆனா இத நான் நிறுத்திட்டா குடும்பமே தெருவுல தான் நிக்கும்… | The Poor and Young Rickshaw Puller Daddy’s Real Life Story!

0
0

நிம்மதி?

நான் எப்போ கடைசியா நிம்மதியா ஓய்வெடுத்தேன், இல்ல எப்போ நான் நல்லா நேரமெடுத்து இரவு உணவு சாப்பிட்டேன்னு எனக்கு தெரியாது. நாள் முழுக்க நான் உழைக்கணும். அது என் கடமை, அது தான் என் கட்டாயமும் கூட. நான் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் என் வீட்டுல இருக்கவங்க நிம்மதியா வாழ முடியாது.

என் அப்பா, அம்மாவ நான் தான் பாதுகாத்துட்டு வரேன். என் அம்மாவுக்கு வயித்துல ஏதோ நோய். அத சரி பண்ணனும், அவங்க சிகிச்சைக்கு நான் தான் வாரம் தவறாம பணம் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

அப்பா, அம்மாவ தாண்டி என் குடும்பத்துல மொத்தம் ஆறு பேரு. அவங்க எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. என் குடும்பத்துல நான் ஒருத்தன் மட்டும் தான் இப்போதைக்கு உழைச்சுக்கிட்டு இருக்கேன்.

திட்டுவாங்க!

திட்டுவாங்க!

நான் தாக்காவுல வாழ்ந்துட்டு இருக்கேன். மத்தவங்க எல்லாரும் என் சொந்த ஊருல தான் இருக்காங்க. என் தொழில் ரிக்ஷா ஓட்டுறது. தாக்கா தெருவுல ரிக்ஷாக்காரங்களைவிட நாய்களுக்கு தான் மதிப்பு அதிகம். நாய்கள் கிட்ட பரிவா, அன்பா நடந்துக்குற மக்கள் ஏனோ ரிக்ஷா காரங்கன்னா மதிக்கவே மாட்டாங்க. எங்கள கேவலமா திட்டுவாங்க.

Image Source: Youtube

ரேஸ்!

ரேஸ்!

தாக்காவுல என்ன மாதிரி சொந்த பந்தத்த, நேசித்த உயிர்கள விட்டு வீட்டுக்காக, உறவுக்காக, சொந்த, பந்தகள் அங்க நிம்மதியா இருக்க உழைக்க வந்த ஜனங்க ரொம்ப அதிகம். ரிக்ஷா ஓட்டுறவங்க ரொம்பவே அதிகம். ரிக்ஷா ஓட்டுறது ஒரு ரேஸ் மாதிரி. வர கஸ்டமர் எதிர்பாக்குற நேரத்துல கொண்டு போய் சேர்க்கனும்.

பிடிக்கல!

பிடிக்கல!

எனக்கு இந்த வேலை சுத்தமா பிடிக்கவே இல்ல. சில சமயம் ட்ராபிக் அதிகமா இருக்க இந்த சாலைகள்ல ரிக்ஷா ஓட்டவே பயமா இருக்கும். எப்ப, என்ன ஆகும்னே தெரியாது. ஆனா, என்ன நம்பி அங்க ஊருல இருக்க அவங்கள நினைக்கும் போதே இதெல்லாம் எனக்கு வருத்தமாவே இல்ல. உழைக்கணும், உழைக்கணும்ன்னு உள்ளக்குள்ள ஒரு வெறி மட்டும் தான் இருக்கு.

அவங்க என்ன எதிர்பார்த்து தான் இருக்காங்க. அவங்க வாழ்க்கை என்ன நம்பி இருக்கு. நான் இல்லாட்டி அவங்களுக்கு யாரு சாப்பாடு போடுவாங்க, அவங்க யார்கிட்ட போய் நிப்பாங்கன்னு தெரியாது. எனக்கு ஏதாவது ஆயிட்டா, ஒருவேளை நான் இறந்தே போயிட்டா… அவங்க எல்லாரும் சாக வேண்டியது தான் கதி. எனக்கு வேற வழி இல்ல. நான் தினமும் ரிக்ஷா ஓட்டி தான் ஆகணும்.

ஆவலா காத்துக் கிடப்பாங்க...

ஆவலா காத்துக் கிடப்பாங்க…

நான் என் மனைவி ரோத்னா, என்னோட இரட்டை குழந்தைங்க ராடன், ரிடாய் ரெண்டு போரையும் எங்க கிராமத்துலயே விட்டுட்டு இங்க தனியா தான் இருக்கேன். அப்பப்ப குழந்தைங்க முகத்தையாவது பார்த்துட்டு வரலாமேன்னு தோணும். ஆனால், இங்க நான் உழைச்சா தான் அங்க அவங்க நிம்மதியா வாழ முடியும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் எல்லாத்தையும் போய் ஒருமுறை பார்த்துட்டு வர முடியும்.

அடுத்த முறை வரும் போது, நிச்சயமா அப்பா உங்களுக்கு புது ஸ்கூல் பேக் வாங்கிட்டு வரேன்னு சாத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்திருக்கேன். வாங்கிட்டு போகணும். எனக்காக அவங்க ஆவலா காத்துட்டு இருப்பாங்க. நானும் தான்… அவங்கள வாரி என் மார்ல அணைச்சு தூக்கி கொண்டாட காத்துக் கிடக்கேன்.

– ரூபெல், வயது 29

வங்காள தேச புகைப்பட கலைஞர் மற்றும் மனித நேய ஆர்வலர் ஜி.எம்.பி ஆகாஷ் அவரது முகநூல் பதிவில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நிஜ வாழ்க்கை கட்டுரை