இந்த டிராபிக் ஜாம் போதுமா?! ஹைதராபாத்தில் ஸ்வீடன் பர்னிச்சர் பிராண்ட் Ikea மெகாஸ்டோர் ஏற்படுத்திய வரலாறு காணாத நெரிசல்: வைரலான புகைப்படம்

0
0

ஸ்வீடனின் புகழ்பெற்ற Ikea என்ற பர்னிச்சர் பிராண்ட் இந்தியாவில் முதன் முதலாக ஹைதராபாத்தில் தனது மெகா ஸ்டோரைத் திறந்தது, இதில் 1000 பேர் அமரக்கூடிய பெரிய ரெஸ்டாரண்ட் உள்ளது. தங்கள் நகரைத் தேர்ந்தெடுத்ததால் ஐதராபாத் மக்கள் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

இதனையடுத்து இகியே பர்னிச்சர் மெகாஸ்டோருக்கு மக்கள் விரைய வரலாறு காணாத மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதன் புகைப்படங்கள் வைரலானது.

இதனையடுத்து சமூகவலைத்தளங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.

 

இகியே பர்னிச்சர் மெகாஸ்டோர் ஒன்றும் பொருட்காட்சி அல்லவே, அது ஒரு ஸ்டோர் என்ற ரீதியில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அலுவலகத்திலிருந்து 40 நிமிடங்களில் வீட்டுக்குச் செல்ல வேண்டியது இந்தப் பெரிய போக்குவரத்து நெரிசலினால் 2 மணி நேரம் ஆகிவிட்டது என்று ஒருவர் அங்கலாய்த்துள்ளார்.

மேலும் சிலர் டிராபிக் போலீஸார் பணியினை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

மேலும் சிலர் ஏற்கெனவே நெரிசலான பகுதியில் இவ்வளவு பெரிய ஸ்டோரை திறக்க அனுமதி கொடுத்ததை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

சுமார் 20கிமீக்கு போக்குவரத்து நெரிசல். பலரும் வீடு போய்ச்சேர 4 மணி நேரம் ஆனதாக கடும் கோபத்தில் பதிவிட்டுள்ளனர்.

இகியே மெகாஸ்டோர் கிளப்பிய மார்க்கெட்டிங் ஸ்டண்ட்தான் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக கடும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.