இந்த சிவப்பு பழத்தை சாப்பிட்டால் சட்டுனு எடையை குறைக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா? | Can Eating Tomatoes Help You Lose Weight

0
0

அந்த பழம் – என்ன பழம்?

உடல் எடையை விரைவாக எளிதில் குறைக்க உதவும் எந்த பழம் வேறெதுவும் இல்லை, நமக்கு நன்கு தெரிந்த, நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய தக்காளி பழம் தான். தக்காளியை தினசரி சரியான உணவு இடைவேளையில் அல்லது உணவாகவே உட்கொண்டு வந்தால், அது உடல் எடையை மிக விரைவாக குறைக்க உதவும். இந்த தக்காளி பழத்தை எப்படி உட்கொள்ள வேண்டும், எப்படி உண்டால் எது உடல் எடையை மேலும் விரைவாக குறைக்கும் போன்ற விஷயங்களை அடுத்தடுத்த பத்திகளில் படித்தறியுங்கள்.

இப்பொழுது தக்காளியில் உள்ள உடல் எடையை குறைக்க உதவக்கூடிய விஷயங்களை பற்றி படித்தறிவோம்.

எந்த மாதிரியான உணவு?

எந்த மாதிரியான உணவு?

ஒரு தக்காளியில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளன; இரண்டு தக்காளிகளை உண்டால் கூட 32 கலோரிகள் அதாவது ஐம்பதிற்கும் குறைவான கலோரிகள் மட்டுமே உடலில் தோன்றும். இது போன்று உட்கொள்ளும் உணவுகளில் கலோரி குறைந்த உணவுகளை உண்டாலே விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம்.

மேலும் தக்காளி நார்ச்சத்து நிறைந்த உணவு. பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறன்றன.

என்னென்ன நன்மைகள்?

என்னென்ன நன்மைகள்?

தக்காளியை உடல் எடையினை குறைக்க உண்பதால், உடல் எடை குறைப்பு எனும் விஷயத்தோடு, உடற்செயலிய மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல், உடலின் கிளைகெமிக் அளவினை குறைவாகவே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது, நோய்கிருமிகள் உடலில் ஏற்படாமல் இருக்க ஆன்டி ஆக்சிடண்டுகளை உடலிற்கு தருதல் போன்ற நன்மைகளை தக்காளி தருகிறது.

தக்காளி உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கி, உடலை குளிர்ச்சியாக வைக்கவும், மாலுத்தம் மற்றும் சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படும் இருக்கவும் உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்குமா?

உடல் எடையைக் குறைக்குமா?

தக்காளி நீர்ச்சத்து நிறைந்த ஒரு உணவு. இது உடலின் கெட்ட கொழுப்புக்கள் உடனடியாக கரைக்க உதவுகிறது. மேலும் இது அதிகளவு ஆன்டி ஆக்சிடண்டுகள், நார்ச்சத்து போன்ற சத்துக்களை கொண்டுள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவைக் கூட்டி, கெடுதல் விளைவிக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது; இதிலுள்ள கலோரிகளின் அளவும் மிகக்குறைவு. இந்த செயல்பாடுகளின் மூலமாக தக்காளி பழம் உடல் எடையை மிக விரைவாக குறைக்க உதவுகிறது.

எப்படி உண்ண வேண்டும்?

எப்படி உண்ண வேண்டும்?

தக்காளியை உணவாக அல்லது தக்காளி அதிகம் சேர்க்கப்பட்ட உணவினை உட்கொள்ளல் வேண்டும். இதை சாறாகவோ அல்லது உணவாகவோ, சாலட்டாகவோ உட்கொள்ளலாம்.

  1. தக்காளியைக் கொண்டு பழச்சாறு அல்லது ஸ்மூத்தி போன்ற பருகும் பான வகைகளை தயாரித்து உட்கொள்ளலாம். இது பசியைத் தங்க, பசிக்காத வகையில் அமைய, இதனுடன் மற்ற காய்கறிகள் அல்லது பழங்கள் போன்றவை சேர்த்தும் சுவையயன பழச்சாறு தயாரிக்கலாம்.
  2. தக்காளியை சாலட் வடிவில், அனைத்துக் காய்கறிகள் அல்லது பழங்கள் அகலந்த சாலட் வடிவில் உட்கொள்ளலாம்.
  3. கூடுமானவரை புதிய தக்காளிகளை கொண்டு உணவு தயாரித்து உண்ண முயலவும்; இதனை கூழ் வடிவிலும் உட்கொள்ளலாம்.
  4. தக்காளியை சுண்டல், காளான், கேரட், பட்டாணி, பச்சை பட்டாணி போன்ற சைவ காய்கறி மற்றும் பயறு வகைகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
  5. கிரில்டு சிக்கன், மீன், தக்காளி என்ற அசைவ வடிவாகவும் இதனை உண்ணலாம்.
  6. தக்காளியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொள்ளலாம்; மேலும் தக்காளி சூப்பினை மதிய மற்றும் இரவு வேளைகளில் உட்கொள்ளலாம்.
  7. தக்காளி ஜூஸ் மற்றும் வெள்ளரி சான்டவிச் என்ற காம்பினேஷனில் அமைந்த உணவும் உடல் எடையை விரைவாக குறைக்க உதவும்.