இந்த ஆடிப்பெருக்கில் உங்களுடைய ராசிக்கு என்னென்ன விஷயங்கள் பெருகப்போகுது? | horoscope for 03 August 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

0
0

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

தொழிலில் நீங்கள் மேற்கொள்கின்ற புதிய முயற்சிகளில் அதிக அளவு லாபங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் செயல்களை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மயதுக்குள் இனம் புரியாத சிறுசிறு கவலைகள் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது அலுவலகத்தில் வரும் சின்ன சின்ன விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 – மே 20

விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற போது கொஞ்சம் கவனமாகக் கையாளுவது நல்லது. ஆடம்பர செலவுகள் செய்து சேமிப்பை கரைப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எந்த காரியத்தையும் கொஞ்சம் நிதானமாக செய்து முடிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் புசுவதினால் நன்மைகள் உண்டாகும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

உங்களுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிக்கும். வியாபாரத்தில் உங்களுடைய புதிய வாடிக்கையாளர்களால் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலமாக நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு நீங்களே எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். உறவினர்களுடைய வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வாகனங்கள் மூலமாக சிறுசிறு விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் – 22 ஜூலை

நீங்கள் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க கொஞ்சம் கால தாமதங்கள் ஏற்படலாம். உங்களுடைய தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த சில ஒப்பந்த விஷயங்கள் சரியாக கால தாமதங்கள் ஏற்படும். வெளியூா பயணங்களால் திருப்திகரமான சூழல்கள் ஏற்படும். வியாபாரங்களை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். அரசு மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை – 21 ஆகஸ்ட்

உத்தியோகத்தில் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழியிலான உறவினர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழிலில் வழியில் லாபங்கள் அதிகமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

மனம் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அழகு மற்றும் உடல் தோற்றப் பொலிவுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சிலர் உங்களைப் பற்றிய குறை கூறினாலும் கூட அதை பொிதாக்க வேண்டாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

உங்களுடைய விடாப்பிடியான செயல்பாடுகளினால் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வுகள் காண முயற்சி செய்வீர்கள். தொழிலில் பணியாட்களை அனுசரித்துச் செல்லுஞ்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

இதுவரை இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பணவரவு உண்டாகும். உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். ஆடைகள் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் ஆகியவை உண்டாகும். சுய தொழில்கள் செய்கின்றவர்குள் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

உங்களுடைய வியாபாரங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உங்களுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுடைய தனித் திறமைகளைப் புலப்படுத்துவீர்கள். உங்களுடைய தேவையில்லாத சிந்தனைகளால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் உண்டாகும். உங்களுடைய தேவையற்ற விவாதங்களால் நெருங்கியவர்களிடம் கொஞ்சம் மனக் கசப்புகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் – 20 ஜனவரி

நீங்கள் செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி பெருகும். புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். வீட்டில் உள்ளவர்கள் மூலம் உங்களுடைய அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

செய்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும். உங்களுடைய வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். தனிமையாக இருப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். பொருளாதார நிலை கொஞ்சம் சீராக இருக்கும். மனதுக்குள் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும் கொஞ்சம் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி – 20 மார்ச்

பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் பெருமிதம் தோன்றும். மாணவர்களுக்கு நற்பெயர்கள் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமையான பேச்சுக்களினால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய சொத்து சேர்க்கைகள் உண்டாவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.