இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது? இதோ தெரிஞ்சிக்கோங்க… | monthly predicitions of august 2018

0
0

மேஷம்

உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பாக்கியம் தளளிப் போய்க்கொண்டே இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். அதன்மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெரியோர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டில் குழந்தைகளின் மூலமாக அனுகூலமான செய்திகள் வந்து சேரும். தந்தையின் வழி உறவினர்களால்” எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இயந்திரங்கள் தொடர்புடைய துறைகளில் பணிபுரிகின்றவர்கள் மேன்மை பெறுவார்கள். மனைவியின் உறவுகள் வழியிலும் லாபம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வாகனங்களினால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் எதிரிகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து போகும். ராகவேந்திரரை வழிபட்டு வாருங்கள். மன அமைதி பெருகும்.

ரிஷபம்

ரிஷபம்

தொழிலுக்குள் உங்களுடைய மறைமுக எதிர்ப்புகளை கண்டு களைவீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்களுடைய பிடிவாத குணத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ள வேண்டும். பணிபுரியும் இடங்களில் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பயணங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழில் முறைகளில் அவ்வப்போது சோர்வுகள் ஏற்படுவதால் கால தாமதங்கள் ஏற்படும். உறவினர்களுக்கு இடையே மனக்கவலைகள் வந்து போகும். தந்தையிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உடன் பிறப்புகளால் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். கொஞ்சம் நிதானமாக நடவடிக்கையினால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கடவுள் பெருமாளை வழிபடுங்கள்.

மிதுனம்

மிதுனம்

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் பெரிய பெரிய செயல் திட்டங்களை நிறைவேறுவதற்கான வாய்ப்புகளும் அதற்கான ஆற்றலும் உண்டாகும். உங்களைத் தேடி வருகிறவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள். பணியில் உங்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் உங்களுடைய எண்ணங்கள் போல வெற்றி உண்டாகும். நீங்கள் எந்த பொருளையும் கையாளும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் பாராட்டப்படுவீர்கள். கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தங்கள். பயணங்களின் மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களின் மூலமாக லாபங்கள் உண்டாகும். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

கடகம்

கடகம்

நண்பர்களுடன் உரையாடுகின்ற போது, கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் கையில் எடுத்த காரியத்தை கொஞ்சம் அவசரமின்றி, நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் அதை அவசரமின்றி நிதானமாக செய்யுங்கள். உடலில் வலுவும் ஆரோக்கியமும் மேம்படும். வீண் அலைச்சல்களால் நீங்கள் எதிர்பார்த்த பணிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் உண்டாகும். எதிர்பார்க்காத சுப செய்திகளினால் பண நெருக்கடிகள் உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களுடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதால், உங்களுக்குள் இருநு்த தேவையற்ற மனக்கசப்புகளைத் தவிர்க்க முடியும். மனைவியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். மருத்துவத் துறையில் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளும் நல்ல பெயரும் உண்டாகும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு மன உறுதியை உண்டாக்கும்.

சிம்மம்

சிம்மம்

உறவினர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். வெளியூா் சம்பந்தப்பட்ட தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களால் உண்டாகும் அலைச்சல்களால் தேவையில்லாத சோர்வுகள் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் காரிய விருத்தி உண்டாகும். அனைவரையும் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதினால் எதிர்ப்புகள் குறையும். உடலில் உண்டாகும் உஷ்ணங்களினால் கொப்புளங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும். தாய்மாமனுடைய வழியினில் ஆதரவுகள் உண்டாகும். உடல் சோர்வின் மூலமாக பணிபுரிகின்ற இடங்களில் அவச் சொற்கள் உண்டாக நேரிடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணியில் அடிக்கடி இடமாற்றங்கள் உண்டாகும். குழப்பமான மன நிலையினால் நெருங்கியவர்களிடம் பிரிவினைகள் உண்டாக வாய்ப்புண்டு. நவ கிரகத்தில் உள்ள சூரிய பகவானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி

உங்களுடைய பேச்சு வன்மையினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனதுக்குள் தைரியம் அதிகரிக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உண்டாகும். வேலையாட்களால் ஏற்படுகின்ற இன்னல்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சமான சூழல்கள் உண்டாகும். உடன் இருப்வர்களின் குணநலன்களைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையிடம் ஏற்படுகின்ற வாக்குவாதங்களினால் மனக்கசப்புகள் நேரிடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியங்கள் கிடைக்க கால தாமதங்கள் ஆகும். பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஒருவிதமான வெறுப்புணர்ச்சிகள் உண்டாகும். பெண்கள் மூலமாக உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உருவாகும். எதிர்பாராத தன வரவுகளினால் மேன்மையான சூழல்கள் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். கல்வி பயில்வோருக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். நவ கிரகங்களில் உள்ள சுக்கிர தேவனை வழிபடுங்கள். சிக்கல்கள் குறையும்.

துலாம்

துலாம்

செய்யும் செயல்களினால் சற்று சிந்தித்து செயல்படுங்கள். பழக்கம் இல்லாத புதிய புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். மனதுக்குள் இருக்கின்ற சஞ்சலமான எண்ணங்களினால் உங்களுக்கு குழப்பமான மனநிலைகள் உண்டாகும். நண்பர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன பகைமையை விடுத்து கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உடல் வலிமை மேம்படும். மனைவியினால் கொஞ்சம் அனுகூலமான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் புது விதமான எண்ணங்களும் அதை செயல்படுத்துகின்ற திறமையும் வெளிப்படும். சின்ன சின்ன காரியங்கள் மூலம் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உங்களுடைய மனதின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நலனில் கொஞ்சம் கவனம் வேண்டும். மாணவர்கள் கொஞ்சம் ஆசிரியர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். நெருப்பு சார்ந்த தொழிலிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். செயல்பாடுகளில் உங்களுடைய வேகங்கள் அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நினைத்த காரியத்தை சரியாக செய்து முடிப்பீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கின்றன. பரம்பரை சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தந்தையினுடைய உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும். பிரயாணங்களின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் உங்கள் எண்ணங்கள் மேம்படும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய புதிய முயற்சிகளை துணிச்சலுடன் அணுகி, வெற்றி காண்பீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனைவியிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் தோன்றி மறையும். நகைச்சுவை உணர்வுகள் மேம்படும். அரசுத் தரப்பில் இருந்து ஆதாயங்கள் ஏற்படும். எதிரிகளினால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். சித்தர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு

தனுசு

வீட்டில் உள்ள குழந்தைகள் பற்றி இருந்து வந்த கவலைகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியமும் முன்னேற்றம் அடையும். பரம்பரை சொத்துக்களினால் சில சில இன்னல்கள் தோன்றி மறையும். பழைய நண்பர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிகளும் வழிகாட்டுதல்களும் உங்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல செயல்படுவீர்கள். கல்வி மற்றும் புதிய முயற்சிகளினால் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். அனுபவ அறிவுகள் மேம்படும். ஆடம்பர செலவுகளினால் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். பத்திரிக்கைத் துறைகளில் இருப்போர்க்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். துர்க்கா தேவியை வழிபடுங்கள். துணிவு பெறுவீர்கள்.

மகரம்

மகரம்

அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். மனதுக்குள் இருந்து வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தொழிலில் நண்பர்கள் மூலம் ஆதரவான சூழல்கள் உண்டாகும். வேலை பார்க்கும் இடங்களில் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு கவனம் வேண்டும். மனைவியின் மூலமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். உங்களுடைய பழக்க வழக்கங்களினால் மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் போராடும் குணமும் தன்னம்பிக்கையும் மேம்படும். பண வரவுகள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் ஆர்வங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான முயற்சிகளினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். தொழில் பங்குதாரர்களிடம் உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்

கும்பம்

கடன் தொல்லையினால் ஏற்பட்ட மன வருத்தமும் பண நெருக்கடியும் குறைய ஆரம்பிக்கும். நண்பர்களின் மூலமாக ஆதரவுகள் உண்டாகும். உடல் வெப்பம் அதிகரிக்கும். அது சம்பந்தமான உடல் பிரச்னைகள் தோன்றும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களினால் தொழில் வாய்ப்புகள் பெருகும். வீட்டில் தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூா் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு கிடைக்க கால தாமதங்கள் உண்டாகும். மனதுக்கு மிக அதிகம் விரும்பிய நபர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். மனைவியின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளினால் உங்களுடைய திறமைகள் புலப்படும். நவ கிரகங்களில் உள்ள புதனை வழிபடுங்கள். நல்ல வழி பிறக்கும்.

மீனம்

மீனம்

பணிபுரிகின்ற இடங்களில் உள்ள எதிர்பாலினத்தவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். நகைச்சுவையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல்கள் உண்டாகின்றன. அதனால் உங்களுடைய பேச்சுக்களில் கவனமாக இருக்க வேண்டும். தாய்மாமன் உறவுகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். சாமர்த்தியமான செயல்பாடுகளினால் மற்றவர்களிடம் பாராட்டப்படுவீர்கள். போட்டி மற்றும் பந்தயங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்களில் ஈடுபட முயற்சி செய்வீர்கள். செய்யும் காரியங்களில் உங்களுடைய வேகம் அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்களும் அதை நிறுவுவதற்கான ஆற்றல்கள் பெருகும். வெளியூா பயணங்களினால் உங்களுக்கு வெகுமதியும் சிறப்பும் உண்டாகும். வாரிசுகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். போட்டிகளில் உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். விநாயகரை வழிபட்டு வாருங்கள்.