இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயார்

0
2

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் இஸ்லாமாபாத் தில் நேற்று கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி யும் இம்ரான் கானும் தொலை பேசியில் பேசியுள்ளனர். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப் பிருக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினை காரணமாக கடந்த 2016 நவம்பரில் நடைபெற வேண்டிய சார்க் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மாநாட்டை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதன்மூலம் பிராந்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.