இது ரஜினியின் மெழுகு சிலையா இல்லை ….????

0
33

ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி ரிலீஸானது. எதிர்ப்புக்கு இடையே கர்நாடகாவிலும் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல விமர்சனம் எழுந்தும் முதல் நாள் வசூல் குறைவாகவே வந்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அருங்காட்சியகமும் அவர்களின் கோரிக்கையை ஏற்றது. ரஜினி காலா படம் ரிலீஸான அதே நாளில் ஜெய்பூர் அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்தின் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டது. 5.9 அடி உயரத்தில் 55 கிலோ எடை கொண்ட அந்த சிலையை உருவாக்க 3 மாதங்கள் ஆகியுள்ளது.

காலா ரிலீஸ் நாளில் படையப்பா கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் சிலையை திறந்து வைத்துள்ளனர். அருங்காட்சியகத்திற்கு செல்லும் ரசிகர்கள் ரஜினி சிலையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். ஜெய்பூரில் ரஜினிக்கு சிலை வைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் அந்த சிலை ரஜினி போன்று இல்லை. நடிகர் நகுலுக்கு வெயிட் போட்டால் எப்படி இருப்பாரோ அது போன்று உள்ளது.