‘இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்’… சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ! | Henry Cavil fired for his women statement!

0
0

நியூயார்க்: பிரபல சூப்பர் ஹீரோ நடிகரான ஹென்ரி கெவில் பெண்களை பற்றி கூறிய வார்த்தைகள் சர்ச்சையானதால் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேன் ஆப் ஸ்டீல், மிஷன் இம்பாசிபில், ஜஸ்டிஸ் லீக் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் ஹீரோவாக கலக்கியவர் நடிகர் ஹென்ரி கெவில். இவருடைய மிஷன் இம்பாசிபில் ஃபாலிவுட் திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பெண்களை பற்றி அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.

மிஷன் இம்பாசிபில் ஃபாலிவுட் திரைப்படத்தின் ப்ரொமோஷன் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலியா சென்ற ஹென்ரி கெவில், அங்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் மீ டூ மூவ்மெண்ட் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த ஹென்ரி கெவில், பொது இடத்தில் ஒரு பெண்ணை கவரும் செயலில் ஈடுபடுவதிலோ அல்லது விரட்டி பிடிப்பதிலோ அற்புதமான உணர்வு உள்ளது. பெண்கள் ஆண்களால் கவரப்படுவதற்காக பிறந்தவர்கள் என நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற செயலை பொது இடங்களில் செய்ய பயமாக இருக்கிறது. நான் பிரபலமான நடிகன் என்பதால் மக்களின் பார்வை எளிதில் என் மீது விழும். அவ்வாறு நடந்துகொள்ளும்போது என்னை ஒரு ரேப்பிஸ்டாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

ஹென்ரி கெவிலின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், இதுமிகவும் அபத்தமான பதில் எனவும், சில ஆண்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக்கொள்ளவே இப்படி கூறுகிறார்கள் எனவும் கொந்தளித்தனர். உங்களை ஒரு ரேப்பிஸ்டாக மற்றவர்கள் நினைக்கக்கூடாது என்றால் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதை தவிறுங்கள் என்று காட்டமாக ட்வீட் செய்தனர். ஈடுபடுவதை தவிறுங்கள் என்று காட்டமாக ட்வீட் செய்தனர்.

அதோடு, இப்படிப்பட்ட மனநிலையில் நீங்கள் இருந்தால் மாறவேண்டியது நீங்கள் தான். தொலைக்காட்சியில் புலம்புவதை விட்டுவிட்டு உங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கும் அதே நிலைதான் வரும் என பாலியல் வழக்கை சந்தித்துவரும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ட்விட்டர் கொந்தளிப்புக்கு பிறகு சூப்பர் ஹீரோ ஹென்ரி கெவில் மன்னிப்பு கேட்டுள்ளார்.