இதய நோய்களில் இருந்து காக்கும் எருமை பால்..! இதனை குழந்தைகளும் அருந்தலாமா…? | Health Benefits Of Buffalo Milk

0
0

எருமை பால் :-

பால் என்றாலே அது உடலுக்கு நன்மை தர கூடியதுதான். பொதுவாகவே ஒருவருக்கு ஊட்டசத்துக்கள் மிகவும் குறைவாக இருந்தால் அவர்களை மருத்துவர்கள் பாலை தினமும் குடிக்க சொல்வார்கள். குறிப்பாக பசும்பாலை விட எருமை பாலில் அதிக ஊட்டசத்துக்கள் உள்ளது. இதில் உள்ள இரண்டு மடங்கு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு சில நன்மைகளை தர வல்லது. ஒருவர் மிகவும் ஒல்லியாகவும், ஊட்டசத்துக்கள் குறைந்தும் இருந்தால் அவர்கள் எருமை பால் குடித்தால் விரைவிலேயே நல்ல பலனை அடையலாம்.

பசும் பால் vs எருமை பால்..!

பசும் பால் vs எருமை பால்..!

பொதுவாக மக்களிடையே ஒரு குழப்பம் இருக்கும். பால் உடலுக்கு நல்லதா இல்லையா..? இதற்கு பதில் அளவாக பால் குடித்தால் அது உடலுக்கு நன்மையே தரும். பாலில் அதிக புரதம், கால்சியம், பொட்டாசியம், கொழுப்புகள் போன்றவை உள்ளது. பசும்பாலை காட்டிலும் எருமை பாலிலே 2 மடங்கு அதிக ஊட்டசத்துக்கள் உள்ளது.

ஊட்டச்சத்துக்கள் இவையே...

ஊட்டச்சத்துக்கள் இவையே…

கலோரிகள் – 237 kcal

புரதம் – 9.2 g

கால்சியம் – 412.4mg

கொழுப்பு – 16.8 g

கார்போஹைட்ரெட் – 12.6 g

நீர் சத்து – 203. 5 g

சோடியம் – 0.1 g

கொலெஸ்டெரோல் – 46.4 g

வைட்டமின் பி 12 – 37%

வைட்டமின் சி – 15%

வைட்டமின் சி – 10%

பொட்டாசியம் – 434.3mg

எதிர்ப்பு சக்திக்கு எருமை பால்...!

எதிர்ப்பு சக்திக்கு எருமை பால்…!

எதிர்ப்பு சக்தி மிக குறைவாக உள்ளவர்கள் எருமை பாலை குடித்தால் அவர்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனெனில் இதில் அதிகம் உள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மிகுதியாக கொண்டவை. எனவே, வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து, எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்தி நோய்கள் வராமல் தடுக்கும். ஆனால் உடல் பருமன் உள்ளவர்களுக்கு எருமை பால் ஏற்றதாக இருக்காது. ஏனென்றால், இதில் அதிகம் கொழுப்புகள் உள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு...

இதய ஆரோக்கியத்துக்கு…

எருமை பாலில் வைட்டமின் பி12 அதிகம் இருப்பதால் இதயத்துக்கு பல நன்மைகளை தரும். வைட்டமின் பி12 இதய நோய்களிலிருந்து உங்களை காக்கும். அத்துடன் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நிலைகளை உங்களுக்கு ஏற்படுத்தாது. இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்து ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் வரமால் தடுக்கும்.

வலிமையான எலும்புகள் பெற...

வலிமையான எலும்புகள் பெற…

எருமை பாலில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது. எனவே கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் இதனை குடித்தால் எலும்பு சார்ந்த பல பிரச்சினைகளையும் இது சரி செய்யும். அத்துடன் இதில் உள்ள காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜின்க் எலும்புகள் அதிக வலுப்பெற உதவுகிறது. கீழ் வாதம் உள்ளவர்களுக்கு இந்த எருமை பால் உகந்ததாக இருக்கும்.

குழந்தைகளுக்கு எருமை பாலா..!

குழந்தைகளுக்கு எருமை பாலா..!

பொதுவாக குழந்தைகளின் ஜீரண மண்டலம் நடுத்தர வயதினரை போன்று இருக்காது. அவர்களுக்கு விரைவிலே செரிமானம் ஆக கூடிய உணவு பொருட்களையே கொடுக்க வேண்டும். எருமை பால் குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால், இதில் அதிகம் கொழுப்புகள் உள்ளதால் சீக்கிரம் ஜீரணம் ஆகாது. இதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படலாம். எனவே குழந்தைகளுக்கு பசும் பால் கொடுப்பது உகந்தது. வயோதிக பருவத்தில் உள்ளவர்களுக்கும் எருமை பால் ஏற்றது அல்ல.

முக பொலிவிற்கு :-

முக பொலிவிற்கு :-

பலருக்கு முகம் மிகவும் மங்கலாக இருக்கும். அவர்களின் முக அழகையே இந்த பொலிவற்ற தன்மை கெடுத்து விடும். இவர்களுக்கென்றே ஒரு அற்புத மருந்து இந்த எருமை பால். இதில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் முக பொலிவிற்கு அதிகம் உதவும். சருமத்தை ஆரோக்கியமாகவும், எந்தவித பிரச்சினைகளும் இன்றி எருமை பால் உங்களை பாதுகாக்கும்.

ஒல்லியாக இருப்பவரை புசுபுசுவென மாற்ற...

ஒல்லியாக இருப்பவரை புசுபுசுவென மாற்ற…

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே மாட்டுதா..? உங்களுக்கெனவே இருக்கிறது எருமை பால். கொழுப்பு சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதால் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த எருமை பால் ஒரு அருமையான தீர்வு. பசும்பாலை காட்டிலும் எருமை பாலை ஒல்லியானவர்கள் குடித்தால் உடனடியாக எடை கூடும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.