இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி – இந்து தமிழ் திசை

0
0

ஒடிசாவில், அப்துல்கலாம் தீவிலிருந்து இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஒடிசா கடலோரம் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை இந்த புவி மண்டலத்தின் 100 கி.மீ. உயரத்திற்குள் ஊடுருவித் தாக்கக் கூடியது.

இன்று நடந்த சோதனையில், இந்த ஏவுகணையின்மூலம் 40 கிமீ தொலைவில் எதிரி ஏவுகணையைப்போல போலியாக ஒன்றை இலக்காக நிர்ணயித்துக்கொண்டு அதன்மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

தீவிலிருந்து, புனைந்து உருவாக்கப்பட்ட இலக்குகளை நிர்ணயித்து பல இலக்குகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துத் தாக்கியது

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அதிக உயரத்திலும் குறைவான உயரத்திலும் சந்தித்து இடைமறிப்புத் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.

இந்த ஏவுகணை 7.5 மீ நீளம் கொண்டது.

நிறைய இலக்குகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஒன்றை குறிவைத்து தாக்கப்பட்டபோது மிகச்சரியாக அந்த ஏவுகணை ஒன்று கீழே விழுந்ததாக விண்வெளி ஆய்வக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.