இங்கிலாந்துடனான குரேஷியாவின் வெற்றி: வைரலாகும் தீயணைப்பு வீரர்கள் வீடியோ

0
0

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை குரேஷியா வெளியேற்றியது.  இதன் மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு குரேஷியா முதன் முதலில் முன்னேறியது.

பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, உருகுவே, போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நட்சத்திர வீர்ர்கள் இடம்பெற்றிருந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் குரேஷிய அணி முதன்முதலில்  இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கால்பந்து ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குரேஷியா அணியின் வெற்றியை அந்நாடு முழுவதும்  கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து – குரேஷியா அணிகள் இடையே நடந்த அரையிறுதிப் போட்டியை கண்டுகொண்டிருந்த குரேஷியா தீயணைப்பு வீரர்களுக்கு வேலைக்கான அழைப்பு வந்தவுடன் நொடிப்பொழுதில் அவர்கள் தயாராகி அங்கிருந்து வாகனத்திலிருந்து புறப்படும் வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலர் குரேஷியா தீயணைப்பு வீர்ரகளின் கடமையுணர்வைப் பாராட்டியுள்ளனர்.