‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப கூட்டிட்டு வாங்க’’ – இந்தியாவுடனான தோல்வி குறித்து மைகேல் வாகன் கிண்டல்

0
0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  இந்தியாவுடன் அடைந்த தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் நாங்கள் மீண்டும் நாங்கள் விளையாட முடியுமா என்ற தொனியில் மைக்கேல் வாகன் இந்தப் பதிவையிட்டிருக்கிறார்.

நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் 6 விக்கெட்டுகளில் 268 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோட் சிறப்பாக ஆட இந்திய அணி 40 ஓவர்களில் 269/2 என்று வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது என்று இங்கிலாந்து ஊடகங்கள் பலவும் விமர்சித்து வரும் வேளையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலான பதிவு ஒன்றை பதிவிட்டுருக்கிறார்.

அதில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக சமீபத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே நடந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்து (க்ளீன்ஸ்வீப்) தொடரை இழந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந்தத் தோல்வி மிகப்பெரிய கரும்புள்ளியாகவே இது பதிவானது.

அதனை நினைவுக் கூறும் வகையில் இங்கிலாந்து அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணியுடன் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று நோக்கில் மைக்கேல் வாகன் கிண்டலாக இந்தப் பதிவையிட்டுருக்கிறார்.