ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி படித்துறைகளில் ஆடிப் பெருக்கு விழா உற்சாகம்: பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு

0
0

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் தண்ணீர் இரு கரைகளும் புரள செல்வதால், ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட் டங்களில் ஆடிப் பெருக்கு விழா களைகட்டியது. பல்லாயிரக்கணக் கானோர் காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

தமிழ் மாதங்களில் பெண் தெய் வங்களுக்கு உகந்ததாகக் கருதப் படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18-ம் தேதி ஆடிப் பெருக்கு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, ஆடிப் பெருக்கு நாளான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஓடத்துறை, தில்லைநாயகம், அய்யாளம்மன் உட்பட மாவட்டத்தில் உள்ள காவிரி யாற்றின் அனைத்துப் படித்துறை களிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடிப் பெருக்கை கொண்டாடினர்.

படித்துறைகளில் பெண்கள் வாழை இலையில் பூ, பழம், பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்ட வற்றை வைத்து காவிரித் தாயை வழிபட்டதுடன், ஒருவருக்கொரு வர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொண்டனர். திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர்.

கரூர் மாவட்டத்தில் வாங்கல், நெரூர், மாயனூர் செல்லாண்டியம் மன் கோயில் காவிரிப் படித்துறை களிலும் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவை யாறு புஷ்ய மண்டப படித்துறை, கும்பகோணம் பகவத் படித் துறை, பாலக்கரை, டபீர் படித் துறை, திருக்காட்டுப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் புதுஆறு, வடவாறு படித் துறைகளிலும் ஆடிப் பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப் பட்டது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று கும்பகோணம் காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறையில் சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ராமசுவாமி ஆகிய கோயிலில் இருந்து உற்சவ பெருமாள் தாயா ருடன் சக்கரப் படித்துறையில் எழுந் தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் மூணாறு தலைப்பு, மன்னார் குடி பாமணி ஆறு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான பெண்கள் அரிசி, பழங்களைப் படைத்து வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுறை துலாக்கட்ட காவிரியிலும் பூம்பு கார் கடற்கரை, கொள்ளிடம், காரைக்கால் மதகடிப் பகுதியில் அரசலாற்றங் கரையிலும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர்.

மேட்டூர் அணை முனியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர் கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

காவிரி ஆற்றுபடுகையான மேட்டூர் அணை பூங்கா, கூனான் டியூர், திப்பம்பட்டி, பண்ணவாடி, கல்வடங்கம், பூலாம்பட்டி, பவானி கூடுதுறை என காவிரி கரை யோரங்களில் ஆயிரக்கணக் கானோர் திரண்டு புனித நீராடினர்.

சேலம் நகர பகுதியில் குடிநீர் குழாய், நீர்தேக்க தொட்டிகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி, காவிரி தாயை வணங்கி ஆடிப் பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.