ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி.’க்கான விளக்கம் இதுதான்!

0
0

ஆர்.ஜே. பாலாஜி நடித்துவரும் ‘எல்.கே.ஜி.’ படத்துக்கான விளக்கம் என்ன என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துவரும் படம் ‘எல்.கே.ஜி.’. பிரபு இயக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இருக்கிறார். இதில் பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்க, பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் தலைப்புக்கான விளக்கம் என்ன என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. ‘லால்குடி கருப்பையா காந்தி’ என்பதன் சுருக்கம்தான் ‘எல்.கே.ஜி’. இதுதான் படத்தில் பாலாஜியின் பெயர். அத்துடன், ‘புரட்சி செல்வன்’ என இந்தத் தலைப்புக்கு டேக்லைனும் கொடுக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.