ஆருத்ரா படம் உருவாக நிர்பயா சம்பவமே காரணம்: பா.விஜய்

0
0

நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் உருவாகி இருக்கிறது என்று பாடலாசிரியர் பா.விஜய் பட விழாவில் கூறியிருக்கிறார்.

பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஆருத்ரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.விஜய் கூறியதாவது:-

 

நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை நான் உருவாக்கினேன். தற்போது நிகழ்ந்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடியாக இப்படம் இருக்கும். 

 

பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக ஆருத்ரா இருக்கும்“ என தெரிவித்தார்.