ஆப்கனில் நிலச்சரிவு: 10 பேர் பலி

0
0

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் வடக்கு காபூலிலுள்ள பன்ஜ்ஷிர் மாகாணத்தில் பெய்த கன மழையினால் உண்டான வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கனில் மலைப் பிரதேசங்களில் பல இடங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று ஆப்கான் தேசிய பேரிடர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட இறப்புகள் குறித்து ஆப்கன் அதிபர்  அஷ்ரப் கானி வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருவதாகவும் மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஆப்கான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.